📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 10, 2026 01:04 AM

நாணயக் கொள்கையை ஆணையம் வலுப்படுத்தலாம் என எதிர்பார்ப்பு

நாணயக் கொள்கையை ஆணையம் வலுப்படுத்தலாம் என எதிர்பார்ப்பு

சிங்கப்பூரின் நாணயக் கொள்கை மேலும் வலுப்படுத்தப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான பொருளியல், பணவீக்க அபாயங்களுக்கு இடையே நாணயக் கொள்கையை இறுக்கமாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை (அக்டோபர் 7) அன்று தனது கொள்கையைச் சிங்கப்பூர் நாணய ஆணையம் மறுபரிசீலனை செய்வதாக இருந்தது.

இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 10 ஆய்வாளர்களும் அக்டோபர் 14ஆம் தேதியன்று நாணயக் கொள்கையை ஆணையம் இறுக்கமாக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இவ்வாண்டு ஜூலை மாதத்தில் ஆணையம், மிகச்சிறிய அளவில் கொள்கையை இறுக்கமாக்கி சந்தைகளுக்கு ஆச்சரியம் அளித்தது.

நவம்பர் 3ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும் உலகளாவிய எண்ணெய் விலை நிச்சயமற்றதாக உள்ளது.

மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைவதால் பொருள், சேவை விலை அதிகரிக்கும் அபாயமும் இருக்கிறது. மேலும் ‘சூப்பர் எல் நினோ’ அச்சுறுத்தலால் உணவுச் செலவுகள் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் அடிப்படைப் பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக ஓசிபிசி வங்கியின் பொருளியல் நிபுணர் செலினா லிங் கூறினார்.

பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வெள்ளம், வறட்சி, கடுமையான வெப்பம் மற்றும் விளைநிலம் பாதிப்புகள் ஏற்படலாம்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது உச்ச கட்டத்தை எட்டலாம் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த மாதம் வெளியாக்கப்பட்ட அதிகாரபூர்வ தரவுகளின்படி ஆகஸ்ட் மாதத்தில் அடிப்படை, ஒட்டுமொத்த பணவீக்கம் முறையே 2.2 விழுக்காடு, 2.3 விழுக்காடாக இருந்தது.

2026ஆம் ஆண்டு முழுவதற்கும் அடிப்படை, ஒட்டுமொத்த பணவீக்கம் சராசரியாக 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடாக இருக்கும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது. ஈரான் போர் எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளதால் உலகம் முழுவதும் போக்குவரத்து, எரிசக்தி, உற்பத்திச் செலவுகள் கூடி மத்திய வங்கிகள் பணவீக்கத்திற்கு எதிரான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

அமெரிக்க மத்திய வங்கி கடந்த மாதம் வட்டி விகிதங்களைக் கால் விழுக்காடு உயர்த்தியது. ஐரோப்பாவிலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐரோப்பிய மத்திய வங்கியும் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தும் எனச் சந்தைகள் எதிர்பார்க்கின்றன.