முதல் படத்திலேயே சிக்கிய வாரிசு.. ஹீரோயின் விட்ட சாபம் பலிச்சுடுச்சாம்.. வீட்டில் செம அப்செட்டாம்
சென்னை: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்த அவர்; இப்போது அதிலிருந்து ஒதுங்கிவிட்டார். அவரது வாரிசு இப்போது சினிமாவுக்குள் வந்துவிட்டார். முதல் படத்தில் சூப்பராக பணியாற்றினாலும் அவருக்கு தேவையான வெற்றி கிடைக்கவில்லை. அதேசமயம் தேவையில்லாத சர்ச்சையும், கெட்ட பெயரும் வந்திருப்பதுதான் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
கோலிவுட்டின் முன்னணி மாஸ் ஹீரோ அவர். திடீரென பாதை மாற்றி, ரோலும் மாற்றியதால் நடிகர் என்ற இடத்தை விட்டுக்கொடுத்துவிட்டார். அதிலிருந்து விலகி இப்போது வேறு ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அதில் அவர் படு பிஸியாக வேலை பார்த்தாலும்; திரையில் அவரை காண முடியாததை நினைத்து ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். அந்த சமயத்தில்தான் நடிகரின் மகனுடைய என்ட்ரி நடந்தது.
சூப்பர் என்ட்ரி: ஆனால் அப்பா மாதிரியே முழுக்க முழுக்க மாறாமல்; கேப்டன் அவதாரத்தை எடுத்திருக்கிறார். முதல் படமே ஹை பட்ஜெட்டில் வெளிநாட்டுக்கெல்லாம் சென்று படம் படித்துவிட்டு வந்தார். ஹீரோவும் முழு ஒத்துழைப்பை கொடுத்திருந்தார். எப்படியாவது இந்தப் படத்தை பெரிய வெற்றி படமாக கொடுத்து; தாத்தா, தந்தை பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை.
அப்செட்டில் வாரிசு: மேக்கிங் ரீதியாக அவர் பாஸாகிவிட்டார்தான். ஆனால் கதை, திரைக்கதை விஷயத்தில் கொஞ்சம்கூட தேறவில்லை என்ற விமர்சனம்தான் வந்திருக்கிறது. இவரெல்லாம் வெளிநாட்டில் சென்று என்னத்த படித்தாரோ என்று ட்ரோலும் செய்கிறார்கள். இத்தனைக்கும் அவர் சினிமா தொடர்பான படிப்பை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பெயரை முதல் படத்திலேயே எடுத்துவிட்டோமே என்று வாரிசு அப்செட்டாகிவிட்டாராம்.
மேற்கொண்டு இடி: இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு தகவலும் அரசல் புரசலாக புகைய தொடங்கியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தின் தோல்விக்கு ப்ரோமோஷனும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அந்த ப்ரோமோஷன்களில் ஹீரோயின் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. அதற்கான காரணம்தான் இப்போது தெரியவந்திருக்கிறது. அதாவது சினிமாவுக்கு புதிது என்றாலும்; வாரிசுக்கு சினிமா சூழ்நிலைகளும், அங்கே நடப்பதும் வாரிசுக்கு புதிது இல்லை. சிறு வயதிலிருந்தே அந்த சூழ்நிலையில்தான் வளர்ந்திருக்கிறார்.
இதனால் சூது வாதெல்லாம் வாரிசுக்கு கொஞ்சம் அத்துப்படியாம். அந்த ஃபார்முலாபடி ஹீரோயினை அந்த ஷூட்டில் வளைத்துவிட்டாராம். ஹீரோயினுக்கு எக்கச்சக்கமான வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்து; தன்னுடைய இஷ்டத்துக்கு பயன்படுத்தினாராம். நடிகையும் நம்பி களத்தில் இறங்கினாராம். ஷூட்டிங் முடிந்ததும் வாரிசு கல்தா கொடுத்ததால் நடிகை ரொம்பவே ஏமாற்றமடைந்துவிட்டாராம்.
ஒருமுறை டப்பிங்கின்போதுகூட வாரிசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம். மேலும், ஏகப்பட்ட சாபங்களை அள்ளி வீசினாராம். இப்போது வாரிசு இருக்கும் நிலைமையே வேறு என்பதால்; இதை வெளியே சொன்னால் தனக்குதான் பிரச்னை வரும் என்று நடிகையே மூடி மறைத்துவிட்டாராம். இருப்பினும் பெண் பாவம் பொல்லாதது என்பதற்கு ஏற்ப; அந்த ஹீரோயினின் சாபம்தான் படத்தின் ரிசல்ட்டை அடித்துவிட்டது என்று கிசுகிசுகிறார்கள். வாரிசும் அதை நினைத்து குமுறுகிறாராம். வீட்டிலும் அவரை எப்படி தேற்றுவது என தெரியாமல் கையை பிசைகிறார்களாம்.