📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 26, 2026 09:12 PM

மண்டபம் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

மண்டபம் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

மண்டபம் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

மண்டபம் : மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிக்கூடங்கள் அரசு அலுவலகங்களில் டெங்கு கொசுவை அழித்தல் மற்றும் நோய் நோய்களை தடுக்கும் விதமாக குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராமநாதபுரம் கிழக்கு பகுதியில் டெங்கு உள்ளிட்ட கொசுவினால் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் மண்டபம் வட்டாரத்தில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மண்டபம் வட்டாரத்திற்கு உட்பட்ட 196 பள்ளிகள், 3 கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டி.பி.சி பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், தேவையற்ற நீர் தேக்கங்களை அகற்றுதல், கொசுப்புழு உற்பத்திக்கான வாய்ப்புகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதிகளில் நேற்று மண்டபம் வட்டார பகுதியில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை முனீஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து பருவ மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், தேவையற்ற நீர் தேக்கங்களை உடனுக்குடன் அகற்றவும் துறைகள் சார்ந்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டனர்.

அதுபோல கிராமங்கள் தோறும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தண்ணீர் தேங்க விடாதீர், டெங்கு பரவலைத் தடுப்பீர் என்ற நோக்கில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை மற்றும் கொசு ஒழிப்பு தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.