📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 25, 2026 02:01 PM

பிரம்மாண்ட சமையல் திருவிழா.. சோனி டிவியில் Celebrity Master Chef Tamil.. சிறப்பு நடுவராக சமந்தா!

பிரம்மாண்ட சமையல் திருவிழா.. சோனி டிவியில் Celebrity Master Chef Tamil.. சிறப்பு நடுவராக சமந்தா!

சென்னை: இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சுச் சாப்பிடக் கிடைத்தது என்ற வரிகளுக்கு ஏற்ப, உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிடுவதே தனித் திருப்திதான். தழை வாழை போட்டு அதில் நமக்கு பிடித்த உணவுகளை வெச்சி ரசித்து ருசித்து சாப்பிடும் போது வர திருப்தி இருக்கே, அது வேற எதிலும் வராது. நம்ம நாக்கோடு ஒன்றிப்போன விஷயம் தான் சாப்பாடு. அந்த சாப்பாட்டை பிரபலம் சமைத்தல் எப்படி இருக்கும் அவர்களின் ருசி என்ன என்பதை சொல்லும் நிகழ்ச்சி தான் ''Celebrity Master Chef'' இந்த நிகழ்ச்சி அக்டோபர் 19ந் தேதியில் இருந்து Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாக உள்ளது.

''Celebrity Master Chef'' : பனிஜே ஆசியா தயாரிக்கும் 'Celebrity MasterChef Tamil' நிகழ்ச்சியில் ஜாம்பவான்களான செஃப் வெங்கடேஷ் பட் , செஃப் ஸ்ரேயா அட்கா, செஃப் சஷி செலியா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இவர்கள் மூவரும் தங்களது தனித்துவமான சமையல் அனுபவம், சர்வதேச அனுபவம் மற்றும் உணவின் மீதான ஆர்வத்துடன் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பர்கள். இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே. விஜய் தொகுத்து வழங்க, நடிகை சமந்தா சிறப்பு நடுவராக உள்ளார். இந்த பிரம்மாண்டமான சமையல் நிகழ்ச்சி Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்குகிறது. இந்த புதிய சமையல் நிகழ்ச்சியில், சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளை கொண்ட ஒரு சமையல் நிகழ்ச்சியாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

தமிழ் உணவின் பெருமை: இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய செஃப் வெங்கடேஷ் பட், இந்திய உணவு வகைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்று நமது உணவின் தனித்துவத்தையும் வளத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய Master Chef நிகழ்ச்சியை நான் பெருமையுடன் பார்த்திருக்கிறேன். இப்போது Celebrity MasterChef Tamil மூலம் தமிழ் உணவின் பாரம்பரியம், பல்வேறு சுவைகள் மற்றும் அதன் ஆழத்தை கொண்டாடும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும் என்றார். உண்மையான தமிழ் உணவின் சிறப்பை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன் சுவைகளையும் கதைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பகுதியான நான் இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

பெருமைப்படுகிறேன்: இந்த நிகழ்துச்சி குறித்து பேசிய, செஃப் சஷி செலியா "MasterChef சமையலறைக்குள் நான் வந்த பயணம் மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். எனது பணியை Singapore Police Force-ல் தொடங்கினேன், ஒருநாள் MasterChef Australia சமையலறைக்குள் நுழைந்து, இறுதியில் அந்த போட்டியில் வெற்றி பெறுவேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.எனது குழந்தைப் பருவத்தையும் சமையல் பயணத்தையும் உருவாக்கிய இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவுகளின் சுவைகள் என் பயணத்தில் முக்கியமான பங்கு வகித்தது. நாம் யார் எங்கிருந்து வந்தோம் என்பதை உணவின் மூலம் சொல்ல முடியும் என்பதை அந்த அனுபவம் எனக்கு கற்று தந்தது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம் என்றார்.

பாரம்பரிய உணவு: செஃப் ஸ்ரேயா அட்கா பேசுகையில், ஒவ்வொரு கொண்டாட்டமும் சிறந்த உணவிலிருந்துதான் தொடங்குகின்றது. Sony VIZHA மூலம் அந்த கொண்டாட்டம் இன்னும் பெரியதாகவும், சிறப்பாகவும் மாறியிருக்கிறது. MasterChef பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் உணவு எப்படி மக்களை ஒன்றிணைக்கிறது, உரையாடல்களை உருவாக்குகிறது மற்றும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குகிறது என்பதை நேரடியாக பார்த்திருக்கிறேன். Celebrity MasterChef Tamil அந்த உணர்வை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்கிறது என்றார்.