📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 25, 2026 02:03 PM

ஜெம் வீரமணி: 'ஜூலை 5... அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!'

ஜெம் வீரமணி: 'ஜூலை 5... அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!'

ஜெம் வீரமணி: 'ஜூலை 5... அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' - சர்ச்சையாகும் விழாவின் பின்னணி!

அமைச்சர் லோகேஷூக்கு சேலம். ஜெம் வீரமணிக்கு திருச்செங்கோடு. அவர் ஒரு பிரபல தொழிலதிபர். பொது வாழ்வில் அரசியல்வாதிகள் பலருக்குமே ஜெம் வீரமணியை தெரியும்.

பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியிருக்கும் ஜெம் வீரமணி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தவெக அமைச்சர்கள் லோகேஸ் தனபாலும், வெங்கட்ரமணனும் அவருடன் மேடையில் இருப்பதைப் போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்வில் 'வீரமணி எங்களது குடும்ப நண்பர்' என அமைச்சர் லோகேஷ் தனபால் பேசியிருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. திமுகவினர் இந்த வீடியோவை ஷேர் செய்து தவெக அமைச்சர்களை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி குறித்து அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

'ஜூலை 5 ஆம் தேதி பத்திரிகையாளர் ஒருவரின் அழைப்பின் பேரில் அமைச்சர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அமைச்சர் லோகேஷூக்கு அந்த பத்திரிகையாளருடன் தனிப்பட்ட நட்பும் கூட கிடையாது. பத்திரிகையாளர் என்ற மரியாதையின் அடிப்படையில் அவரின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டிருக்கிறார்.

அமைச்சர்கள் லோகேஷூம் வெங்கட்ரமணனும் மட்டுமில்லை. அமைச்சர் ராஜ்மோகன் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் ஆகியோரையும் அழைத்திருக்கின்றனர். வேறு சில நிகழ்ச்சிகள் இருந்ததால் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை.

ஜெம் வீரமணியின் வீட்டில் நடப்பதெல்லாம் அமைச்சருக்கு எப்படி தெரியும்? ஜூலை 5 ஆம் தேதி ஜெம் வீரமணி கைதும் ஆகவில்லை. அப்படியிருக்க சபை நாகரீகத்துக்காக பேசிய ஒன்றை திமுகவினர் அரசியலாக்குவது அறமற்ற செயல். போக்சோ வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரகசியமாக நடக்கிறது. அதில் இப்படி ஆள் ஆளுக்கு கட்டுக்கதைகளை கிளப்பி சேற்றை வாரி இறைப்பது நல்லதல்ல' என்கின்றனர்.