📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 13, 2026 08:32 AM

HDFC வங்கியின் அடுத்த CEO யார்? RBI

HDFC வங்கியின் அடுத்த CEO யார்? RBI

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓய்வுபெறவுள்ள சஷிதர் ஜகதீஷனுக்குப் (Sashidhar Jagdishan) பதிலாக அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையைத ஹெச்டிஎஃப்சி வங்கி தொடங்கியுள்ளது. அதற்கான இரு வேட்பாளர்களின் பெயர்களை RBI-யிடம் சமர்ப்பித்துள்ளதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.ஹெச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த சி இ ஓ பதவிக்காக யார் யார் பெயர்கள் ஆர்பிஐயிடம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வங்கி நிர்வாகம் தெரிவிக்கவில்லை.தனியார் துறை வங்கிகள் தங்கள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பதற்கு முன் RBI -யின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது இந்திய வங்கி விதிமுறையாகும். இதன் மூலம் உயர் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அங்கீகரிப்பதில் ஒழுங்குமுறை ஆணையமான RBI முக்கிய பங்கு வகிக்கிறது.2020 முதல் வங்கிக்குத் தலைமை தாங்கி வரும் ஜகதீஷன், அக்டோபர் மாதத்தில் தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்ததும் அப்பதவியிலிருந்து விலகவுள்ளார்.மேலும், வங்கி தனது நிர்வாகக் குழுவை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, வி. ஸ்ரீனிவாச ரங்கனை மீண்டும் முழுநேர இயக்குநராகவும், தலைமை கடன் அதிகாரி ஜிம்மி டாடாவை அதே பொறுப்பில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் நியமித்துள்ளது.வங்கியின் துணை நிர்வாக இயக்குநரான கைசாத் பருச்சா (Kaizad Bharucha) ஏற்கனவே முழுநேர இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.அத்துடன், புதிதாக நியமிக்கப்படவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி வகிப்பதற்காக, நான்காவது முழுநேர இயக்குநர் பதவியை உருவாக்கவுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.