📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 10, 2026 02:01 PM

எதிர்ப்புகளும் சர்ச்சைகளும்... தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நூல்கள்..!

எதிர்ப்புகளும் சர்ச்சைகளும்... தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நூல்கள்..!

கருத்துரிமை, மத உணர்வு, சாதிய அரசியல் எனப் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் புத்தகங்கள் மீதான சர்ச்சைகளும், தடைகளும் அவ்வப்போது எழுந்துள்ளன. சமூகத்தின் நம்பிக்கைகளையும் வரலாற்றுப் பார்வைகளையும் கேள்விக்குள்ளாக்கிய படைப்புகள் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளன.

சில நூல்கள் அரசால் தடை செய்யப்பட்ட நிலையில், சில நூல்கள் நீதிமன்றப் போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் வாசகர்களைச் சென்றடைந்தன. அந்த வகையில், தமிழகத்தில் பெரும் விவாதங்களையும் எதிர்ப்புகளையும் உருவாக்கிய சில நூல்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை எழுதிய 'ஆரிய மாயை' (1950) ஒரு சிறு நூலாகும். மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று. ஆரியக் கோட்பாடுகள், புராணக் கதைகளின் முரண்பாடுகள் மற்றும் பிராமணீய ஆதிக்கத்தை அண்ணா இதில் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த நூல் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக அண்ணாதுரை மீது வழக்குத் தொடரப்பட்டு, அவருக்கு ரூ.700 அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஸீரோ டிகிரி

மாதொருபாகன்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அவர்களின் கலாசாரத்தை இந்த நூல் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி உள்ளூர் அமைப்புகளும் சில சாதிய அமைப்புகளும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தன. போராட்டங்கள் தீவிரமடைந்ததால், பெருமாள் முருகன் மன உளைச்சலுக்கு ஆளாகி, "எழுத்தாளன் பெருமாள் முருகன் இறந்துவிட்டான்" என்று அறிவித்துவிட்டு, தனது அனைத்து நூல்களையும் திரும்பப் பெறுவதாகக் கூறினார்.

சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. "புத்தகம் பிடிக்கவில்லை என்றால் மூடி வைத்துவிடுங்கள்" என்று கூறி, நாவலுக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இது பெருமாள் முருகன் மீண்டும் எழுதத் தொடங்க வழிவகுத்தது.

மீண்டெழும் பாண்டியர் வரலாறு

மாற்றுச் சமூகங்களின் வரலாற்றை அல்லது உரிமைகளை இந்நூல் குறைத்து மதிப்பிடுவதாகவும், தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பொது அமைதியைக் காக்கும் பொருட்டு 2013-ம் ஆண்டு தமிழக அரசு இந்த நூலை தடை செய்தது.

மதுரை வீரன் உண்மை வரலாறு

இந்த நூல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் கருத்துரிமை, மத நம்பிக்கைகள், சாதிய அடையாளங்கள், வரலாற்றுப் பார்வைகள் எனப் பல்வேறு விவாதங்களை முன்னெடுத்துள்ளன. ஒரு படைப்பின் கருத்துகளுடன் முரண்படுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அதேவேளையில் அந்தக் கருத்துகளை விவாதத்தின் மூலம் எதிர்கொள்வதே ஜனநாயகத்தின் அடிப்படை. ஒரு படைப்பை மதிப்பிடுவதில் அதன் மீதான எதிர்ப்பைக் காட்டிலும், அதைச் சுதந்திரமாக விவாதிக்க அனுமதிக்கும் சமூகத்தின் மனப்பக்குவமே முக்கியமானது.