📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 02:03 AM

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஆனீ மேரி ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை இகூடுதல் செயலாளராக ஷ்ரேயா பி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ராஜ கோபால் சுங்காரா நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் ஆட்சியராக சரண்யா அரி நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியராக அப்துல் ராஸிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியராக நல்லசிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண் துறை இணை செயலாளராக ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை இணை செயலாளராக சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராக சுகபுத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்) தாகரே சுபம் தந்தியோரோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக வீர் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக பொன்மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்ரீன் சரண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்;

ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமனம்.

கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக லில்லி நியமனம்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமனம்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமனம்.

அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜ் நியமனம்.

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையராக அஜய் யாதவ் நியமனம்.

பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமனம்.

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவநந்தம் நியமனம்.

டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்.

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம்.

தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமி நியமனம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமு நியமனம்.

தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்.