📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 21, 2026 11:03 PM

யார் இந்த திரிவேணி? அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற திருமணத்தின்

யார் இந்த திரிவேணி? அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற திருமணத்தின்

யார் இந்த திரிவேணி? அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற திருமணத்தின் பின்னணி

திரிவேணி இல்ல திருமணத்தில் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற நிலையில், அந்த தொழில் குழுமத்தின் அரசியல் பின்னணி குறித்து பார்க்கலாம்

சேலம் ஓமலூர் அருகே நடைபெற்ற ‘திரிவேணி’ இல்ல திருமண வரவேற்பு விழா, அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் வருகையால் பேசுபொருளாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், சீமான், துரை வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் திரிவேணி எர்த்மூவர்ஸ் நிறுவனம், சுரங்கத் துறையில் நாட்டின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அந்த நிறுவனத்தை பி. பிரபாகரன் தலைமையேற்று நடத்தி வருகிறார். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, 1993-ம் ஆண்டு ஒரு எக்ஸ்கவேட்டர் மூலம் தொடங்கிய அவரது தொழில் பயணம், தற்போது பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய சுரங்கத் திட்டங்களை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

திரிவேணி குழுமம் அரசியல் வட்டாரங்களுடனான தொடர்பு காரணமாகவும் கடந்த காலங்களில் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஒடிசாவின் கியோஞ்சர் பகுதியில் சுரங்கப் பணிகளில் நிறுவனம் ஈடுபட்ட காலத்தில், பிரபாகரனுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாகவும், அப்போது ஆளும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களின் ஆதரவு இருந்ததாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் குற்றம்சாட்டியதாக Times of India 2012-ல் செய்தி வெளியிட்டது.

பல கட்சிகளுக்கு நிதி

திரிவேணி நிறுவனத்தின் அரசியல் தொடர்பைப் பேசும்போது, தேர்தல் நிதி பதிவுகளும் முக்கியமாகின்றன. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளில், திரிவேணி எர்த்மூவர்ஸ் பாஜகவுக்கு நிதி வழங்கியிருப்பதுடன், பிஜு ஜனதா தளம் மற்றும் திமுகவுக்கும் நிதி வழங்கியிருப்பது பதிவாகியுள்ளது. குறிப்பாக தேர்தல் பத்திரத் தரவுகளில் பாஜகவுக்கு ரூ.5 கோடியும், திமுகவுக்கு ரூ.3 கோடியும் வழங்கியதாக பதிவுகள் காட்டுகின்றன.

அதேபோல், 2024-25 நிதியாண்டுக்கான அதிமுகவின் நன்கொடை பதிவில், திரிவேணி எர்த்மூவர்ஸ் நிறுவனத்திடமிருந்து ஏப்ரல் 2024-ல் முறையே ரூ.2 கோடி, ரூ.2 கோடி மற்றும் ரூ.1 கோடி என மொத்தம் ரூ.5 கோடி பெறப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் திரிவேணி குழுமத்தை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் மட்டுமே இணைத்துப் பார்ப்பதைவிட, பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் நிதி மற்றும் சமூகத் தொடர்புகள் கொண்டிருக்கும் ஒரு பெரிய தொழில் குழுமமாகப் பார்ப்பதற்கான பதிவுகள் உள்ளன.

திருமணத்தில் அரசியல் - சினிமா சங்கமம்

இத்தகைய பின்னணியில்தான் திரிவேணி இல்ல திருமண வரவேற்பு நடைபெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் துர்கா ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

திரையுலகில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லைகா நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே திருமண நிகழ்ச்சியில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், முன்னணி நடிகர்களும் திரண்டிருப்பது, சேலத்தைச் சேர்ந்த இந்த தொழில் குடும்பத்தின் சமூக மற்றும் அரசியல் வட்டாரத் தொடர்புகளை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி