📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 13, 2026 10:32 AM

வணிகப் போக்குவரத்துக்காக ஹார்முஸ் திறந்தே இருக்கும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வணிகப் போக்குவரத்துக்காக ஹார்முஸ் திறந்தே இருக்கும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், வணிகப் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, ஈரானுடனான தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கத்தார், பெஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு ஈரானில் 140 இடங்களில் அமெரிக்கா தாக்கியுள்ளது. இதனால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலை தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த வழியாக எந்தக் கப்பலும் செல்ல அனுமதி கிடையாது என்று கூறிவிட்டது.

இந்த நிலையில், வணிகப் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சென்று கொண்டு தான் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.