📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 03:03 AM

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்றே ஊதியம் வழங்க ஏற்பாடு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்றே ஊதியம் வழங்க ஏற்பாடு

புதுடெல்லி / சென்னை: வங்கி ஊழியர்​கள் வேலைநிறுத்​தம் காரண​மாக மத்​திய, மாநில அரசு ஊழியர்​களுக்கு இன்றே ஊதி​யம் வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

வாரத்​தில் 5 நாட்​கள் வேலை என்​பது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி செப்​டம்​பர் 28 முதல் வங்கி ஊழியர்​கள் 3 நாட்​கள் வேலைநிறுத்​தத்​தில் ஈடுபட உள்​ளனர். இதனால் மாதத்​தின் கடைசி நாளான செப்​டம்​பர் 30-ம் தேதி மத்​திய அரசு ஊழியர்​களுக்கு ஊதி​யத்தை வரவு வைக்க முடி​யாத சூழல் எழுந்​திருக்​கிறது. எனவே, இந்த மாதம் முன்​கூட்​டியே ஊதி​யம் வழங்க மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது.

இதுகுறித்து மத்​திய நிதித் துறை​யின் தலை​மைக் கணக்கு அதி​காரி அலு​வல​கம் (சிஜிஏ) நேற்று வெளி​யிட்ட சுற்​றறிக்​கை​யில், ‘‘செப்​டம்​பர் 28, 29, 30 ஆகிய தேதி​களில் வங்கி ஊழியர்​கள் நாடு தழு​விய வேலை நிறுத்​தத்தை அறி​வித்து உள்​ளனர். இதனால் வங்​கிச் சேவை​கள் பாதிக்​கப்​படக் கூடும். இதைக் கருத்​தில் கொண்டு மத்​திய அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு முன்​கூட்​டியே செப்​டம்​பர் 25-ம் தேதி ஊதி​யம் வழங்​கப்​படும்’’ என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

ஞாயிற்​றுக்​கிழமை: செப்​டம்​பர் 26-ம் தேதி சனிக்​கிழமை, செப்​டம்​பர் 27-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை நாட்​களில் அரசு, தனி​யார் துறை வங்​கி​களுக்கு விடு​முறை ஆகும். இதைத் தொடர்ந்து செப்​டம்​பர் 28-ம் தேதி முதல் 3 நாட்​கள் வங்கி ஊழியர்​கள் வேலைநிறுத்​தத்​தில் ஈடுபட இருப்​ப​தால் தொடர்ச்​சி​யாக 5 நாட்​கள் வங்​கிச் சேவை​கள் பாதிக்​கப்​படும்.

இதை கருத்​தில் கொண்டு செப்​டம்​பர் 27-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை அரசு பொதுத்​துறை வங்​கி​கள் செயல்​படும் என்று மத்​திய நிதித் துறை அறி​வித்து உள்​ளது. இந்​நிலை​யில், வங்கி நிர்​வாகங்​கள் சார்​பில் வாடிக்​கை​யாளர்​களுக்​குக் குறுந்​தகவல் அனுப்​பப்​பட்டு வரு​கிறது. அதில், “வங்கி ஊழியர் வேலைநிறுத்த நாட்​களில் பணப் பரிவர்த்​தனை​களுக்கு மொபைல் பேங்​கிங், நெட் பேங்​கிங், யுபிஐ உள்​ளிட்ட டிஜிட்​டல் தளங்​கள் மற்​றும் ஏடிஎம் இயந்​திரத்​தைப் பயன்​படுத்​தலாம்" என்று அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது.

தமிழக அரசு உத்​தரவு: மத்​திய அரசு போலவே தமிழக அரசு ஊழியர்​களுக்​கும் செப்​டம்​பர் மாதத்​துக்​கான ஊதி​யத்தை முன்​கூட்​டியே இன்று செப்​டம்​பர் 25-ம் தேதி வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் மாநில அரசு ஊழியர்​களுக்கு ஊதி​யம் மற்​றும் ஓய்​வூ​தி​யம் மாதத்​தின் கடைசி நாளில் வழங்​கப்​படு​கிறது. ஒரு​வேளை கடைசி நாள் விடு​முறை நாளாக இருப்​பின் அதற்கு முந்​தைய நாளி​லேயே ஊதி​யம் வழங்​கப்​பட்டு விடும். தற்​போது வங்கி ஊழியர் வேலை நிறுத்​தப் போராட்​டம் காரண​மாக, வழக்​கம் போல் மாத கடைசி நாளில் (செப்​டம்​பர் 30-ம் தேதி) ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் கிடைக்​குமா என்று அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் கவலை அடைந்​தனர்.

இந்​நிலை​யில், மத்​திய அரசைப் போன்று தமிழக அரசு ஊழியர்​களுக்​கும் செப்​டம்​பர் மாத சம்​பளத்தை முன்​கூட்​டியே செப்​டம்​பர் 25-ம் தேதி வழங்க தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, அனைத்து துறை​களின் செயலர்​கள் மற்​றும் துறை​களின் தலை​வர்​களுக்கு நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் நேற்று அனுப்​பிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: செப்​டம்​பர் 28 முதல் 30-ம் தேதி வரை வங்கி ஊழியர்​கள் நடத்​தும் வேலை நிறுத்​தப் போராட்​டம் மற்​றும் அக்​டோபர் 2 முதல் 4-ம் தேதி வரையி​லான வார விடு​முறை நாட்​கள் காரண​மாக வங்​கி​களின் அன்​றாட செயல்​பாடு​கள் பாதிக்​கப்​படும்.

இதை கருத்​தில் கொண்டு அனைத்​துத் துறை தலை​வர்​களும் செப்​டம்​பர் மாதத்​துக்​கான ஊதி​யப் பட்​டியலைத் தயாரித்து ஊதி​யத்​தைச் செப்​டம்​பர் 25-ம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்​கு​மாறு தங்​கள் அதி​காரத்​துக்கு உட்​பட்ட ஊதி​யம் வழங்​கும் அலு​வலர்​களை அறி​வுறுத்த வேண்​டும். அதற்​கேற்ப கரு​வூல கணக்கு இயக்​குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அனைத்து ஊதி​யக் கணக்கு அலு​வலர்​களுக்​கு, கரு​வூல கணக்கு இயக்​குநர் டி.​சா​ரு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில், ‘‘வங்கி வேலை நிறுத்​தத்​தால் இம்​மாதத்​துக்​கான அனைத்து மாதாந்​திர ஊதி​யம், தினக்​கூலி, ஓய்​வூ​தி​யப் பட்​டியல்​களை வரும் 30-ம் தேதி என்​றில்​லாமல் முன்​கூட்​டியே 25-ம் தேதி அன்றே தயாரித்து அனைத்து ஊதி​யம், தினக்​கூலி, ஓய்​வூ​திய பட்​டியல்​களுக்​கான மின்​னணு தீர்வு வழங்​கப்பட வேண்​டும். மேலும், இதுதொடர்​பாக அனைத்து பணம் வழங்​கும் அலு​வலர்​களுக்​கும்​ பட்​டியல்​களை முன்​கூட்​டியே சமர்ப்​பிக்​கு​மாறு அறி​வுறுத்​த வேண்​டும்​’’ என்​று கூறியுள்​ளார்​.