📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 07:03 AM

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை: விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? என்று தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?. இந்த டம்மி ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதல்வர் விவசாயிகளை வஞ்சித்தார். இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1ம் தேதியே திறந்து வைத்தார். தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது. இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும்-பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறுவை சிறப்பு தொகுப்புக்கும் வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதல்வர், இன்றைக்கு பேப்பரை படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும். ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த சர்க்கஸ் அரசாங்கம். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதல்வருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை.

திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த ரீல்ஸ் வெறி ஆட்சி இருக்கிறது. விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.