ஊழலை ஒழித்த ஒரே தலைவர் முதலமைச்சர் விஜய்
மதுராந்தகம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மரகதம் குமர வேலுவை ஆதரித்து பிரசாரக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ராஜ்குமார், தென்னரசு உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. - அ.தி.மு.க.
இப்போது நாம் தி.மு.க. அதி.மு.க.வை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்களில் 2 கட்சிகளும் இருக்காது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் தான் இருக்கும்.
முதலமைச்சர் விஜய் வருகை
அடுத்த வாரம் முதலமைச்சர் விஜய் உங்களை சந்திக்க வருகிறார். அப்போது பாருங்கள் எப்படி இருக்கும் என்று. சும்மா அப்படி கலகல என்று இருக்கும்.
ஊழலை ஒழிக்க முடியாது ஒழிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 125 நாட்களில் ஊழலை ஒழித்த ஒரே தலைவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
234 தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் முகத்திற்காக மக்கள் ஒத்த ரூபாய் வாங்காமல் அவருக்காக வாக்களித்துள்ளனர்.
அவர்களுக்கு ஒரு காலமும் நாம் துரோகம் செய்யக்கூடாது. மக்கள் நம்மளை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சர்களாக இருந்தாலும் சரி தவறு செய்தால் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன ஒரே தலைவர் நம் தலைவர் விஜய்.
கடந்த ஆட்சிகாலங்களில் மாதம் மாதம் ரூ.1350 கோடி கட்சி நிதியாக சென்று கொண்டிருந்தது. இந்த நான்கு மாதத்தில் அந்த ரூ.1350 கோடி எங்கு சென்றது எங்களுக்கு தெரியாது.
நாங்களும் அதைத் தேடிப் போகவில்லை. ஏன் என்று சொன்னால் அதில் ஒத்த ரூபாய் வாங்கினால் நான் கூட அமைச்சராக இருக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அமர்ந்திருக்க முடியாது.
தவறு செய்தால் யாரை வேண்டுமென்றாலும் தூக்கி போட்டுவிட்டு போய்க் கொண்டே இருப்பார் நம் முதலமைச்சர்.
மக்களுக்கு சேவை செய்வது மட்டும் தான் எங்களது குறிக்கோள். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த உடன் சுய உதவி குழுக்களுக்கு ரூ.52 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
உங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றுவோம். தமிழக வெற்றிக் கழகத்தின் மரகதம் குமரவேல் இருக்கும்போது கடைசி வரை அவரது முகம் சிரித்த முகமாகத் தான் இருக்கும்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் எங்களுக்கு இருக்கிறதே தவிர காசு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. எனவே நீங்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேலுவை வெற்றி பெறச் செய்யுங்கள்.
மதுராந்தகம் தொகுதியை நம் முதலமைச்சர் சிறப்பான தொகுதியாக மாற்றிக் காட்டுவார். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் விஜய் சின்னமான விசில் சின்னத்தில் அனைவரும் வாக்களியுங்கள். நாங்கள் என்றும் மக்களோடு மக்களாக தான் இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.