📅 Sunday, 12 July 2026 IST | ஆனி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 11, 2026 11:34 PM

தயார் நிலையில் 1,000 ஏவுகணைகள்.. ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

தயார் நிலையில் 1,000 ஏவுகணைகள்.. ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

தயார் நிலையில் 1,000 ஏவுகணைகள்.. ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபரைக் படுகொலை செய்ய ஈரான் அரசாங்கம் முயன்றால், ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழிப்பதற்குஅமெரிக்க ராணுவத்திற்கு ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய பிப்ரவரி மாத தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வந்தது. மேலும், எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களையும் நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவமும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகுகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும் இதனால் கோபமுற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நிலவுகிறது. தவிர, அமெரிக்கா ஈரான் மீது தீவிர தாக்குதலையும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது சமூக ஊடகமான 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஈரான் தம்மைக் குறிவைத்தால் அந்நாட்டின் மீது மிகப்பெரிய இராணுவத் தாக்குதல் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”ஈரானை நோக்கி ஏவுவதற்காக 1,000 ஏவுகணைகள் 'லாக்டு அண்ட் லோடடு' செய்யப்பட்டுள்ளன என்றும், தேவைப்பட்டால் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பாயும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின்போது, அமெரிக்க அதிபரைக் கொலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்கள் தீவிரமாக எழுப்பப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் புதிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை அண்மையில் அமெரிக்காவிற்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்திருந்தது. இந்த எச்சரிக்கையின் தீவிரத்தை அடுத்தே ட்ரம்ப் தற்போது இத்தகைய கடுமையான பதிவை வெளியிட்டுள்ளார்.