📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 08, 2026 05:03 AM

த்ரிஷாவிடம் இருந்து வந்த முதல் மெசேஜ்.. மாஸ்டர் வாய்ப்புக் கிடைத்ததுமே.. ஓபனா சொன்ன மாளவிகா மோகனன்!

த்ரிஷாவிடம் இருந்து வந்த முதல் மெசேஜ்.. மாஸ்டர் வாய்ப்புக் கிடைத்ததுமே.. ஓபனா சொன்ன மாளவிகா மோகனன்!

சென்னை: கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். முதல் பாகத்தில் மாளவிகா மோகனன் இல்லாத நிலையில், 2வது பாகத்தில் ஒரு மிஷனை முடிக்க சர்தாரை தேடிச் செல்லும் அதிகாரியாக இவர் நடித்துள்ளார்.

எங்க ரெண்டு பேருக்கும் இடையே எந்தவொரு ரொமான்ஸ் காட்சிகளுக்கும் ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டார் இயக்குநர் பி.எஸ். மித்ரன் என முன்னதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்னொரு பேட்டியில் பேசிய மாளவிகா மோகனன் நடிகை த்ரிஷா குறித்தும் அவருடன் பேட்ட படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.

த்ரிஷா ரொம்ப ஸ்வீட்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். அந்த படத்தில் த்ரிஷா உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது. அவர் ரொம்பவே ஸ்வீட்டான நபர். வாரணாசியில் படப்பிடிப்பு நடந்த போது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுற்றினோம். நான் மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக பெரிய படங்கள் பண்ணிய நடிகை இல்லை. ஆனாலும், என்னை அன்புடனும் அக்கறையுடனும் த்ரிஷா பார்த்துக் கொண்டார் என்றார்.

மாஸ்டர் வாய்ப்பு வந்ததுமே: அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சாருடன் மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்த படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்ததும் முதல் ஆளாக எனக்கு மெசேஜ் பண்ணி வாழ்த்தியது நடிகை த்ரிஷா தான். "ஹே பேப், உனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு ரொம்பவே சந்தோஷம், இது பெரிய விஷயம்.. சூப்பரா பண்ணு எனக் கூறினார்" என மாளவிகா மோகனன் த்ரிஷா உடன் தனக்கு உள்ள பாண்டிங் குறித்து பேசியிருந்தார்.

அடுத்து தான் த்ரிஷா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்த நிலையில், மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் தான் த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து ஹீரோயினாக விஜய்யுடன் இணைந்து நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 10ம் தேதி பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 வெளியாகிறது.