📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 03, 2026 06:03 PM

தெம்பனிஸ் வீவக குடியிருப்பு தீ விபத்து

தெம்பனிஸ் வீவக குடியிருப்பு தீ விபத்து

தெம்பனிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) குடியிருப்பின் தரைத்தளத்தில் இருக்கும் வீடு ஒன்றில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) தீ விபத்து ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட புளோக்கில் இருந்து 20 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 43ல் உள்ள புளோக் 477ல் நடந்த தீ விபத்து குறித்துச் சம்பவத்தன்று காலை 8.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்த மின் விநியோகப் பெட்டியில் தீப்பற்றியதாகவும் தீயணைப்பாளர்கள் நீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த குடியிருப்பாளருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

தீவிபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

‘ஸ்டாம்ப்’ ஊடகம் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட காணொளியில், வீவக குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதையும் சம்பவ இடத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பாதிக்கப்பட்ட புளோக்கின் பின்புறத்தில் காவல்துறையின் தடுப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்ததையும் அதில் காணலாம்.