📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 03, 2026 06:35 PM

Bigg Boss Tamil 10: 'பஸ்

Bigg Boss Tamil 10: 'பஸ்

சென்னை: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இந்த சீசன் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதிலும் குறிப்பாக, இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் சாதாரண பொதுமக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த அறிவிப்பு வெளியானதுமே, பலரும் போட்டி போட்டுக்கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால் அனைவராலும் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில், பொதுமக்களுக்கும் பிக் பாஸ் அனுபவத்தை நேரடியாக கொடுக்கும் வகையில் தற்போது பிக் பாஸ் டீம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

பிக் பாஸ் பஸ்: பிக் பாசை அறிமுகப்படுத்தி உள்ளது.. இந்த பஸ்ஸுக்குள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 9 சீசன்களில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் புகைப்படங்கள், வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட பிரைஸ் மணி பாக்ஸ், பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறைகள் அடங்கிய ரூல்ஸ் புக் என ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த பஸ் எந்தெந்த பகுதிகளுக்கு பயணம் செய்கிறதோ, அந்தந்த பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பஸ்ஸுக்குள் சென்று, பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி இருக்கும் என்பதை நேரடியாக அனுபவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நீங்களும் பிக் பாஸிடம் பேசலாம்: அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் பிக் பாஸிடம் தங்களது கருத்துகளை தெரிவிக்கவோ, பிக் பாஸிடம் ஏதாவது பேச வேண்டும் என்றாலோ, அதற்காகவே பஸ்சுக்குள் பிரத்யேகமாக Confession Room ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியாதவர்களுக்கும், தங்களுடைய பிக் பாஸ் அனுபவத்தை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுமக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது முதலே, பலரும் இந்த வாய்ப்பை எதிர்பார்த்து வந்த நிலையில், போட்டியாளராக செல்ல முடியாதவர்களுக்காக பிக் பாஸ் டீம் இப்படி ஒரு அழகான முயற்சியை மேற்கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 10, போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் நெருக்கமான ஒரு சீசனாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.