📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 09, 2026 05:04 PM

போலி வர்த்தகத்திற்கு யூரோஸ்போர்ட்ஸ் தலைமை நிர்வாகிக்கு அபராதம்

போலி வர்த்தகத்திற்கு யூரோஸ்போர்ட்ஸ் தலைமை நிர்வாகிக்கு அபராதம்

ஆடம்பரக் கார் விநியோக நிறுவனமான யூரோஸ்போர்ட்ஸ் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு புதன்கிழமை (செப்டம்பர் 9) $210,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்தின் பங்குகள் சிறப்பான முறையில் வர்த்தகம் செய்யப்படுவதாகப் பொய்த் தோற்றத்தை உருவாக்க 2015 ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அந்தக் குற்றச் செயலில் கோ கிம் சான் ஈடுபட்டார்.

போலி வர்த்தகம் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை 69 வயதான கோ ஒப்புக்கொண்டார்.

குற்றச் செயல்கள் நடந்தபோது யூரோஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாகத் தலைவராகவும் கோ பதவி வகித்தார்.

மேலும் அப்போது அந்த நிறுவனம் சிங்கப்பூர் பங்குச்சந்தையின் வேகமாக வளரும் நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

யூரோஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் பெரிய அளவில் வர்த்தகம் நடக்காமல் இருந்த காரணத்தால் கோ, தொடர் வர்த்தகம் நடப்பதைக் காட்டுவதற்காக, விலைப் பட்டியலில் சில மாற்றங்களை உருவாக்க, தனது நிறுவனத்தின் பங்குகளில் வர்த்தகம் செய்ய முடிவு செய்தார்.

22 வர்த்தக நாள்களில் 42 முறை, கோ தனது சொந்த வர்த்தகக் கணக்குகளையும் மேலும் மூவரின் வர்த்தகக் கணக்குகளையும் பயன்படுத்தி யூரோஸ்போர்ட்ஸ் பங்குகளை வாங்கும், விற்கவும் அவர் செய்தார்.

அவரது நடவடிக்கையை ஆராய்ந்த அதிகாரிகள் 2021 ஆண்டு டிசம்பரில் கோவை கைது செய்தனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கோ தனது குற்றங்களின் மூலம் நேரடியாக லாபம் அடையவில்லை என்றாலும், சுயநலம், தனிப்பட்ட ஆதாயத்தின் தூண்டுதலால் அவர் செயல்பட்டதாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டது.

கோ,1988ஆம் ஆண்டு யூரோஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

நிறுவனம் முக்கியமாக சொகுசுக் கார்களை விநியோகித்து, விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் வழங்கி வருகிறது.

அந்நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் லம்போர்கினி கார்களின் அதிகாரப்பூர்வ விற்பனையாளராக உள்ளது.