📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 01, 2026 11:03 AM

பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. பிரின்ஸ்

பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. பிரின்ஸ்

பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. பிரின்ஸ் - மனு வெள்ளி வென்று சாதனை

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஆடவர் ஸ்கிஃப் பிரிவில் இந்தியாவின் பிரின்ஸ் குரிசிங்கல் நோபல் மற்றும் மனு பிரான்சிஸ் ஜோடி அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற மொத்தம் 9 பந்தயங்களின் முடிவில் இந்திய ஜோடி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ஒரு பந்தயத்தில் முதலிடம் பிடித்த அவர்கள், கடைசி பந்தயத்திற்கு முன்பாக கடும் நெருக்கடியைச் சந்தித்தனர். பதக்கத்தை தீர்மானிக்கும் 9வது மற்றும் கடைசி பந்தயத்தில் அபாரமாக செயல்பட்ட பிரின்ஸ் - மனு பிரான்சிஸ் ஜோடி 2வது இடத்தைப் பிடித்து அசத்தியது.

ஒட்டுமொத்தமாக 9 பந்தயங்களின் முடிவில் 23 புள்ளிகளைப் பெற்ற இந்திய ஜோடி, 2வது இடத்தை உறுதி செய்து பெருமைமிக்க வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது. இந்தப் பிரிவில் சீன அணி தங்கப் பதக்கத்தையும், ஹாங்காங் அணி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின. பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த பிரின்ஸ் நோபல் மற்றும் மனு பிரான்சிஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஸ்குவாஷ் மகளிர் அணி அரை இறுதியில் பிரிவில் ஹாங்காங்கிற்கு எதிரான அரையிறுதியில் அனஹாத் சிங், தன்வி கன்னா மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தோல்வி அடைந்தது. இதை அடுத்து வெண்கலப் பதக்கம் வென்றது.