Tamil Nadu
July 13, 2026 10:30 PM
மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலராக இருந்த உமாநாத், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுண்ணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ஷில்பா பிரபாகர் சதீஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநராக அம்ரித் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று அருண் ஐபிஎஸ்ஸையும் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu