முதல்வர் விஜய் ஒருவாரம் லண்டன் சுற்றுப்பயணம்: ஆதவ் அர்ஜுனாவும் செல்கிறார்
முதல்வர் விஜய் ஒருவாரம் லண்டன் சுற்றுப்பயணம்: ஆதவ் அர்ஜுனாவும் செல்கிறார்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்துள்ளதையொட்டி, முதல்வர் விஜய் ஒருவார சுற்றுப்பயணமாக இன்று லண்டன் செல்கிறார். தமிழக முதல்வர் விஜய் இன்று இரவு 10.05 மணிக்கு, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு செல்கிறார். லண்டனில் சில தினங்கள் தங்கி இருக்கும் முதல்வர் விஜய், ஐரோப்பிய நாடுகளின் தொழிலதிபர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது தொழிலதிபர்களிடம், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வந்து, புதிய தொழில்கள் தொடங்கும்படியும், தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீட்டுகளை செய்யும்படியும், கேட்டுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
பின்னர், முதல்வர் விஜய், தனது லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 16ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 17ம் காலை 8.05 மணிக்கு சென்னை வந்து சேர்கிறார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு, முதல்வர் விஜய் முதல்முறையாக, சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் வெளிநாட்டிற்கு செல்வதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்வதில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 11 மணிக்கு, முதல்வர் லண்டன் பயண ஏற்பாடுகள் பாதுகாப்புகள் குறித்து சென்னை பழைய விமான நிலையத்தில் ஏ.எஸ்.எல் மீட்டிங் எனப்படும் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்று கூறப்படுகிறது.
அதோடு தொழில் துறை மற்றும் நிதி துறையை சேர்ந்த அதிகாரிகள் ஒரு சிலர் லண்டன் செல்வார்கள் என்றும், அவர்கள் முதல்வருக்கு முன்னதாகவே லண்டன் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, லண்டன் செல்லவில்லை. ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். விளையாட்டு ெதாடர்பான சில தொழில் அதிபர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் நடந்த தொழில்துறை மாநாட்டில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாமல் ரகசியமாக நடந்ததுபோல, லண்டன் கூட்டமும் எந்த அறிவிப்பும் இல்லாமல் ரகசிய கூட்டமாக நடைபெறும் என்றும், அரசு சார்பில் பின்னர் அறிக்ைககள் வௌியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.