📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 07, 2026 12:04 AM

முதல் டி20 போட்டி: இந்தியா

முதல் டி20 போட்டி: இந்தியா

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முத லாவது 20 ஓவர் போட்டி லக்னோவி லக்னோவில் இன்று நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த அந்த அணி அடுத்த தாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையி லான முதலாவது 20 ஓவர் போட்டி உத்தரபிர தேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

உலக சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா சமீபத்தில் ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் பாகிஸ்தானை உதைத்து வாகை சூடிய கையோடு இந்த தொடரில் கால்பதிக் கிறது. ஆசிய விளையாட்டில் வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா அதிரடியில் கலக்கினர். ஆனால் இந்த போட்டி யில் 'இளம்புயல்' சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆசிய விளையாட்டுக்கு இடைக்கால பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமணன் செயல்பட்டார். இந்த தொடரை வழக்கமான பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கவனிக்கிறார். கம்பீர். ஒரே நேரத்தில் ஆடும் லெவனில் சூர்யவன்ஷியையும், சாம்ச னையும் பயன்படுத்துவதை விரும்பமாட்டார். அனேகமாக சாம்சனுக்கே முன்னுரிமை அளிப்பார் என்று தெரிகிறது. மற்றபடி திலக் வர்மா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே மிடில் வரிசையை வலுப்படுத்துவார்கள்.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங்குடன் போதிய அனுப வம் இல்லாத மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் தாக்குதல் தொடுக்க ஆயத்தமாகியுள்ளனர். சுழலுக்கு அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல் தீப் யாதவ் கைகொடுப்பார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் எப்படி?

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப், ஹெட்மயர், ரோமன் பவெல், ரூதர் போர்டு, ஷெப்பர்டு என அதிரடி சூரர்களுக்கு பஞ் சமில்லை. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 352 ரன் இலக்கை விரட்டிப்பிடித்ததால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்கு வார்கள். எனவே ஒரு நாள் தொடர் போன்று இந்த போட்டியிலும் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹூசைன் நேற்று நிருபர்க ளிடம் கூறுகையில், 'இந்தியா அபாயகரமான ஒரு அணி என்பதை அறிவோம். ஆனால் நாங்களும் பின்வாங்கப்போவதில்லை. இரு அணிகளும் இந்த சவாலை எதிர்கொள்ள ஆவலாக உள்ளன. திட்டமிடலை களத்தில் யார் சிறப்பாக செயல்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியம்' என்றார்.

லக்னோ மைதானத்தில் இதுவரை 6 இருபது ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு விளையாடிய 4 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), 3-ல் தோல்வியும் (2-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, ஒன்றில் இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது.

இரவு 7 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் அல்லது சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரின்ஸ் யாதவ் அல்லது மயங்க் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ்: கமில் பூரன், ஷாய் ஹோப் (கேப்டன்), ஹெட்மயர், ரோமன் பவெல், ஷெப்பர்டு, ரூதர்போர்டு, ஷமார் ஸ்பிரிங்கர், மேத்யூ போர்டே, குடகேஷ் மோட்டி, அகீல் ஹூசைன், ஷமார் ஜோசப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.