📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 10, 2026 10:33 AM

முதல்

முதல்

கரூரில் நடைபெறும் அரசு விழா மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கரூர் செல்கிறார்.

முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங் கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் ரோடு-ஷோ செல்ல உள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. கரூர் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய், இன்று கரூர் செல்லும் நிலையில் மக்கள் சந்திப்பு நடக்க இருக்கும் இடத்தின் அருகே உள்ள 3 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.