மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- திமுகவுக்கு "புதிய புரட்சி கழகம்" கட்சி ஆதரவு
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க.தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு "புதிய புரட்சி கழகம்" கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (21.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் புதிய புரட்சி கழகத்தின் தலைவர் ஓ.இ.சங்கர் - பொதுச்செயலாளர் கோல்டன் கோபி ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகளான துணைப் பொதுச்செயலாளர் தரமணி வேலு, தலைமை நிலையச் செயலாளர் மடையத்தூர் துரைசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஹரிகிருஷ்ணன், கொள்கைப் பரப்பு செயலாளர் வழக்கறிஞர் கேட் சேகர், கமலஹாசன் செல்வமணி, உமா மகேஷ்வரன் மாநிலச் செயலாளர் அஜிஸ்ராசா, மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஜி.கே.சேகர், மாவட்ட தலைவர் வி.எம்.மாரிமுத்து, பொருளாளர் இளங்கோ, அமைப்பாளர் மணிகா ஆகியோர் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு புதிய புரட்சி கழகம் முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு புதிய புரட்சி கழக நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது பனையூர் பாபு உடனிருந்தார்.