📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 07, 2026 04:02 AM

 மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

 மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம், மேலுாரில் 12 செ.மீ., மழை பதிவானது. அதேசமயம், தமிழகத்தின் பல பகுதிகளில், நேற்று 4 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதல் வெப்பம் பதிவானது.

தற்போது, தெற்கு தெலுங்கானா முதல், மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

அதனால், இன்றும் நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.