📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 09, 2026 02:00 PM

மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

சென்னை: மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி செய்கின்றனர்.மின்வெட்டு ஏற்படும் இடங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி செய்கின்றனர் . சில இடங்களில் பியூஸ் கேரியர் திருடப்பட்டு உள்ளது. மின்வேட்டு பிரச்னை உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. போராட்டம் நடத்த மக்களை சிலர் தூண்டுகின்றனர்.சூரிய ஒளி மின்சக்தி உற்பத்திக்கு விரைவில் புதிய கொள்கை கொண்டுவரப்படும்.

மின்சாரத்துறை கட்டமைப்பு போதுமானதாக இல்லை. தமிழகத்தில் எங்கெங்கு மின்வெட்டு ஏற்படுகிறது என்பது குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது. பெரம்பூரில் மின்தடை ஏற்பட்ட 40 நிமிடங்களில் சரி செய்து மின் வினியோகம் சரி செய்யப்பட்டது. ஆனால் இரவு முழுவதும் மின் வினியோகம் இல்லை எவன்பது போல தகவல்களை பரப்பினார்கள்.

மின்தடை ஏற்பட்டால் முடிந்த வரை விரைவாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்கள் மூலமாக வரும் மின்வினியோகம் தொடர்பான குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன. இரவு நேரங்களில் மின் வினியோகம் தொடர்பான குறைகளை சரி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்