Mandaadi Kamal's Review
சென்னை: சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. வசூலிலும் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கெத்து காண்பித்தது. ரஜினிகாந்த் உள்ளிட்டோர் படத்தை பாராட்டிய சூழலில்; கமல்ஹாசன் இப்படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை சொல்லியிருக்கிறார்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் சூரிக்கு சினிமாவில் வாழ்க்கை தந்தது. அதனைப் பயன்படுத்தி முன்னணி காமெடி நடிகராக மாறினார். சூழல் இப்படி இருக்க வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் கதையின் நாயகனாக நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அந்த பாதையிலேயே சூரியின் பயணம் தொடர்கிறது. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஒன்று வணிக ரீதியாக வெற்றி பெறுகிறது. இல்லாவிட்டால் சூரிக்கு விமர்சன ரீதியாக பாசிட்டிவ் கிடைத்துவிடுகிறது.
இப்போது மண்டாடி: மாமன் படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் வசூலில் சக்கைப்போடு போட்டது. விடுதலை 2, கொட்டுக்காளி படங்கள் பெரிய அளவில் வசூலிக்கவில்லை; அதேசமயம் விமர்சனத்தில் பாசிட்டிவ்வாக இருந்தது. இப்போது அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
படம் மெகா ஹிட்: இப்படம் ரிலீஸான நாளில்தான் கார்த்தியின் சர்தார் 2வும் வந்தது. எனவே மண்டாடி தாக்குப்பிட்டிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அந்தப் படமோ சர்தாரை சம்பவம் செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மொத்தம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. இந்தியாவிலேயே ஒரு காமெடியன் ஹீரோவான பிறகு 100 கோடி ரூபாய் வசூலித்ததில் மண்டாடிதான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டுக்கள் நிறைய: சூரியின் நடிப்புக்கு பலரிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. ரஜினிகாந்த்தும் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் இன்னொரு ஜாம்பவனான கமல்ஹாசனும் சமீபத்தில் மண்டாடி பார்த்தார். அதற்கு பிறகு அவர் படக்குழுவினரிடம், "நன்றாக இருக்கிறது. வசனம் எல்லாம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் முதலில் சினிமா ரசிகன். பெரிய பெரிய ஹீரோ எல்லாம் தேசி அலையும் சப்ஜெக்ட் இது. அது உங்களுக்கு (சூரி) வாய்த்திருக்கிறது. நல்லது. சந்தோஷமாக இருக்கிறது" என்று புகழ்ந்தார்.
சூரி பதிவு: கமல்ஹாசன் படம் பார்த்தது குறித்தும், அதுகுறித்து தங்களிடம் பேசியது பற்றியும் சூரி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று. கமல் சாரின் நிபந்தனையற்ற அன்பும், வலிமையான வார்த்தைகளும், ஆசீர்வாதமும் எங்களது மண்டாடி பயணத்தை இன்னும் சிறப்பான ஒன்றாக மாற்றியிருக்கிறது. இந்த அழகான தருணத்தை சாத்தியமாக்கிய மகேந்திரன் மற்றும் டிஸ்னி சகோதரருக்கு மனமார்ந்த நன்றி.
வழிநடத்தும் ஆசீர்வாதம்: கமல் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்துக்கு கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கையும் புதிய வெளிச்சமும் கொடுத்திருக்கிறது. மண்டாடி குறித்து அவர் பகிர்ந்த பார்வை எனது வாழ்நாள் முழுவதும் வழிநடத்தும் ஆசீர்வாதமாக இருக்கும்" என நெகிழ்ந்திருக்கிறார்.