📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 12:05 AM

Dorothy: "'டோரதி' என்ற பெயருக்கு இதான் அர்த்தம்"

Dorothy: "'டோரதி' என்ற பெயருக்கு இதான் அர்த்தம்"

Dorothy: "'டோரதி' என்ற பெயருக்கு இதான் அர்த்தம்" - கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ் பேசுகையில், "கார்த்திக் சுப்புராஜ் சார் முதலில் இந்தப் படத்தோட சினாப்சிஸை எனக்கு அனுப்பி, 'இந்த மாதிரி ஒரு படம் பண்றதுக்கு உங்களுக்கு விருப்பம் இருக்கா?'னு கேட்டாரு. அதைப் படிச்சுப் பார்த்த உடனே, 'கண்டிப்பாக நான் பண்றேன் சார்'னு சொன்னேன்.

ஏன்னா, இப்படிப்பட்ட ஒரு படத்தில் நாம நடிக்கிறது நமக்குத்தான் பெருமை. இந்தப் படத்துல நான் சில நாட்கள் மட்டுமே வேலை செய்திருந்தாலும், அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

'டோரதி' என்ற பெயருக்கு 'கடவுளின் பரிசு' என்று பொருள். இந்தப் படமும் பார்வையாளர்களுக்கு அப்படி ஒரு பரிசாகத்தான் இருக்கும். இளையராஜா சாருக்கு ரொம்பவே நன்றி.

இளையராஜா சாரோட இசையமைப்பில் நம்ம நடிப்பு இருக்கும்னு சத்தியமா கனவுல கூட நினைச்சுப் பார்த்ததில்லை.

அந்த அற்புதமான வாய்ப்பைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு ரொம்ப நன்றி. அதேபோல ஒளிப்பதிவாளர் திரு சாருக்கும் நன்றி. எனக்கு பிரியன் சார் எப்படியான ஒரு குருவோ, அதே மாதிரி திரு சாரும் என்னுடைய குரு.

அவர் கூட இது எனக்கு மூணாவது படம், தமிழில் முதல் படம். என்னுடைய முதல் படமான 'கீதாஞ்சலி' சமயத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும்.

திரு சார் முகத்துக்கு நேராகவே உண்மையைச் சொல்லிடுவாரு. 'கீதாஞ்சலி' ஷூட்டிங் சமயத்துல மாலை நேரம் ஆகினாலே நான் கொழுக்கட்டை, லட்டுன்னு சாப்பிட்டுட்டு இருப்பேன்.

அப்போ, 'இப்படிச் சாப்பிட்டு சாப்பிட்டுத்தான் கன்னமெல்லாம் பெருசாகுது'ன்னு கிண்டல் பண்ணுவாரு. அன்னைக்கு ஆரம்பிச்ச எங்களோட இந்தப் பயணம், இத்தனை வருஷம் தாண்டியும் நிலைச்சிருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இந்தப் படம் செப்டம்பர் 25-ஆம் தேதி திரைக்கு வருது. இது கண்டிப்பா மிகப்பெரிய அளவில் பேசப்படக்கூடிய படமாக இருக்கும். 'இது நம்ம தமிழ் படம்'னு நாம எல்லாரும் ரொம்பப் பெருமைப்பட்டுக்கலாம்.

இந்திய அளவில் மட்டுமில்லாமல், உலக அளவிலும் இந்தப் படம் பேசப்படும்னு எனக்குத் தோணுது" எனப் பேசியுள்ளார்.