📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 02, 2026 02:30 AM

கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரம்: மதுபான விடுதிக்கு சீல்

கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரம்: மதுபான விடுதிக்கு சீல்

கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரம்: மதுபான விடுதிக்கு சீல்

இளம்பெண் மீது காரை ஏற்றிக் கொன்ற விவகாரத்தில், புதுச்சேரியில் பதுங்கி இருந்த சுமந்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

Published : June 1, 2026 at 4:44 PM IST

சென்னை: கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சென்னை கேட்வே பார் சீல் வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் யான்சி (18). இவர் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சென்னை வந்து தோழி ஒருவருடைய வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், யான்சி நேற்று முன் தினம் இரவு 17 வயது சிறுமி, தனது தோழியுடன் சேர்ந்து கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவர்களுடன் ஆண் நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். மறுபுற,ம் அதே பாருக்கு சுமந்த் சக்திவேல் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.

அங்கே மது குடித்துவிட்டு நடனமாடும் போது இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பி உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் வெளியே வந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு சுமந்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் சென்றுள்ளனர்.

யான்சி அவரது நண்பர்களும் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த சுமந்த் சக்திவேல் வேகமாக சென்று யான்சி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதில், யான்சியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு பின்னால் அமர்ந்து வந்த 17 வயது சிறுமி பலத்த காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை ஏற்படுத்திய சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த கோயம்பேடு போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே, புதுச்சேரியில் பதுங்கி இருந்த சுமந்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை புதுச்சேரி போலீசார் உதவியுடன் சென்னை போலீசார் கைது செய்தனர்.

மேலும், சென்னை விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்த சுமந்த் சக்திவேலின் நண்பர்களான பாலகுரு, கிஷோர், ஜோஸ்வா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 7 பேரை கைது செய்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபானக் கூடத்தில் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து சுமந்த் சக்திவேல் உள்ளிட்டோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். பாரில் மது அருந்திவிட்டு நடனம் ஆடும் போது தவறுதலாக யான்சி உடல் மீது கைப்பட்டதால் அவருடன் வந்த ஆண் நண்பர்கள் மற்றும் தங்கள் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அந்த கோபத்தில் யான்சி மீது காரை மோதியதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுபான பார் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.