📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 01, 2026 10:03 AM

கள்ளக்காதல் விவகாரத்தால் வந்த வினை; கழுத்து நெரித்து சிறுவன் கொடூர கொ* கள்ளக்காதலனுக்கு வலை; கோயம்பேட்டில் பயங்கரம்!!

கள்ளக்காதல் விவகாரத்தால் வந்த வினை; கழுத்து நெரித்து சிறுவன் கொடூர கொ* கள்ளக்காதலனுக்கு வலை; கோயம்பேட்டில் பயங்கரம்!!

கள்ளக்காதல் விவகாரத்தால் வந்த வினை; கழுத்து நெரித்து சிறுவன் கொடூர கொ* கள்ளக்காதலனுக்கு வலை; கோயம்பேட்டில் பயங்கரம்!!

அண்ணாநகர்: கோயம்பேட்டில் கள்ளக்காதல் விவகாரத்தால் கழுத்து நெரித்து சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக தப்பி ஓடிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்தவர் தீபக் (34). கூலி தொழிலாளி. இவரது மனைவி பூவரசி (30). இவர்களது மகன் தருண் (9). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் பூவரசியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தீபக் பிரிந்து சென்றார். இதையடுத்து, பெற்றோர் உதவியுடன் பூவரசி மற்றும் தருண் ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன் (35) என்பவருடன் பூவரசிக்கு பழக்கம் ஏற்பட்டது. தமிழ்செல்வன், கூலி வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், பூவரசிக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலானது. அவ்வப்போது, பூவரசி வீட்டுக்கு குடிபோதையில் தமிழ்செல்வன் வருவார். பின்னர் இருவரும் தனிமையில் ஜாலியாக இருந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் பூவரசிக்கும், தமிழ்செல்வனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்வப்போது வந்து பூவரசியுடன் ஜாலியாக இருந்து விட்டு செல்வார் தமிழ்செல்வன். நேற்றிரவும் வழக்கம் போல வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென பூவரசிக்கும், தமிழ்செல்வனுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் வெளியே சென்று விட்டார் பூவரசி. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், அங்கே தூங்கி கொண்டிருந்த பூவரசியின் மகன் தருணின் கழுத்தை நெரித்தார். இதில் சிறுவன் அலறி துடித்தார். இருப்பினும் வலுக்கட்டாயமாக வாயை பொத்தி கொண்டு இறுக்கமாக கழுத்தை நெரித்தார். சிறிது நேரத்தில் தருண், துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் தமிழ்செல்வன், தப்பி ஓடி விட்டார். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பூவரசி, வீட்டுக்கு வந்தார். அங்கு தருண், இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போதுதான் இந்த கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தப்பி ஓடிய தமிழ்ச்செல்வனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அவர்கள், தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.