📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 07:04 AM

கேரளா தியேட்டர்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் அடிபொலி தான் போலே!

கேரளா தியேட்டர்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் அடிபொலி தான் போலே!

சென்னை: ஜெயிலர் 2 இந்த முறை தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சம்பவத்தை நிகழ்த்தப்போவதாக மலையாள டிராக்கர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 வரும் அக்டோபர் 15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் மீண்டும் இணைந்துள்ளனர். மேலும், சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, மிர்ணா மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலையாள திரையுலகம் சமீப காலமாக பேக் டு பேக் 300 கோடி வசூல் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஜெயிலர் 2 மலையாளத்திலும் பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரளா தியேட்டர்கள் மொத்தமாக: கேரளாவில் அதிகப்படியாக உள்ள 832 திரைகளில் 800 திரைகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் வெளியாகப் போவதாக கேரளா டிராக்கரும் விமர்சகருமான ஏபி ஜார்ஜ் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் மேல் கேரள தியேட்டர்களை ஜெயிலர் 2 குத்தகைக்கு எடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். இதுவரை 756 திரைகள் உறுதியாகி விட்டதாகவும் விரைவில் 800 திரைகளை லாக் செய்யும் என பதிவிட்டுள்ளார். அல்ல போலேலே பாடல் ஏற்கனவே கேரளா ரசிகர்களிடம் பட்டையை கிளப்பி வரும் நிலையில், ஜெயிலர் 2 படத்தின் பல முக்கிய காட்சிகளும் கேரளாவில் தான் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 டிரைலர் வந்தவுடனே: இதுவரை இல்லாத அளவுக்கு ஜெயிலர் 2 படத்துக்கான ஹைப்பை இன்று மாலை வெளியாகும் ஜெயிலர் 2 டிரைலர் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து நெகட்டிவிட்டிகளையும் சுக்குநூறாக உடைத்து கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸை மீண்டும் தூக்கிப் பிடிப்பார் ரஜினிகாந்த் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

மிர்ணா மேனன் சொன்ன மேட்டர்: ஜெயிலர் படத்தின் இடைவேளை காட்சியை விட பல மடங்கு பெரிய இடைவேளை காட்சியாக ஜெயிலர் 2 தெறிக்கும் என சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை மிர்ணா மேனன் கூறியுள்ளார். ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனின் மருமகளாக நடித்திருப்பார் மிர்ணா மேனன். இந்த படத்தில் வில்லன்கள் அவரை கடத்தப் போகிறார்களா? அல்லது அவரது மகனை கடத்தப் போகின்றனரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.