📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 28, 2026 06:01 PM

கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!

சென்செக்ஸ் 1,124.02 புள்ளிகள் சரிந்து 72,771.72 புள்ளிகளாகவும், நிஃப்டி 360.25 புள்ளிகள் சரிந்து 22,780.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, நிச்சயமற்ற அரசியல் சூழல் மற்றும் பலவீனமான உலகளாவிய பங்குச் சந்தை போக்கு உள்ளிட்டவை முதலீட்டாளர்களை அச்சத்தில் அழ்த்தியதால், இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை வெகுவாக சரிந்தன. இதில் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் சரிந்து ஆறு மாதக் குறைந்தபட்ச நிலையை எட்டியதுடன், நிஃப்டி குறியீடு 22,800 புள்ளிகளுக்குக் கீழே சென்று அனைவரையும் அச்சத்தில் மூழ்கியது.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,124.02 புள்ளிகள் சரிந்து 72,771.72 புள்ளிகளாக நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது, ​​சென்செக்ஸ் 1,179.51 புள்ளிகள் சரிந்து 72,716.23 புள்ளிகள் வரை சென்றது. மார்ச் 30, 2026 வர்த்தகத்துக்கு பிறகு, பதிவான மிகக் குறைந்த நிறைவு நிலை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 360.25 புள்ளிகள் சரிந்து, கிட்டத்தட்ட ஆறு மாதக் குறைந்தபட்ச அளவான 22,780.25 புள்ளிகளாக நிறைவடைந்தது. நிஃப்டி குறியீட்டில் உள்ள 47 பங்குகள் சரிவுடனும், 3 பங்குகள் ஏற்றத்துடனும் முடிவடைந்தன.

தொடர் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு, ஹோர்முஸ் நீரிணை திறப்பது தொடர்பான அமெரிக்கா-ஈரான் இடையிலான முட்டுக்கட்டை ஆகிய காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பலவீனமான ஆசியச் சந்தைகள் ஆகியவற்றால் நிதித்துறை, பொதுத்துறை வங்கிகள், உலோகங்கள், எஃப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வாகனத் துறைப் பங்குகளில் விற்பனையைத் தூண்டியதாக பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

30 பங்குகளை கொண்ட சென்செக்ஸில் 29 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன. லார்சன் & டூப்ரோ பங்குகள் அதிகபட்சமாக 2.81 சதவீதம் சரிந்தது. பவர் கிரிட் 2.62 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 2.38 சதவீதமும், எச்.டி.எஃப்.சி. வங்கி 2.3 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.27 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.24 சதவீதமும் சரிந்தன. இன்ஃபோசிஸ் மட்டுமே ஏற்றம் கண்ட ஒரே நிறுவனமாக அமைந்தது.

தரவுகளின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 3,693.93 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

மோசமடைந்து வரும் உலகப் பொருளாதாரச் சூழலால் முதலீட்டாளர்களிடையே அச்சம் அதிகரித்துள்ள நிலையில், கரடிகளின் ஆதிக்கம் பங்குச் சந்தையில் வலுப்பெற்றது.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன. அதே வேளையில் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஏற்றத்துடன் முடிவடைந்துன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கை மேற்கொண்டன. வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள புதிய ஏற்றம் மற்றும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.81 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 108.3 அமெரிக்க டாலராக உள்ளது.

Stock markets tumbled on Monday, Sensex plunging 1,124 points to a six-month low and the Nifty closing below 22,800 points.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.