📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 15, 2026 06:04 PM

'ஜெயிலர் 2'

'ஜெயிலர் 2'

'ஜெயிலர் 2'- ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நடனமாடி உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தைக் கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Published : October 14, 2026 at 11:02 PM IST

சென்னை: 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், சென்னையில் உள்ள காசி திரையரங்கில் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை (அக்.15) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, சென்னை காசி திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் சூழலில், இந்த நடன நிகழ்வு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‎பொதுவாகவே ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டுவது வழக்கம். பிரம்மாண்டமான பேனர்கள், சிறப்புக் காட்சிகள் என ரசிகர்கள் தங்களது தலைவரின் திரைப்பட வெளியீட்டைத் திருவிழாவைப் போலக் கொண்டாடுவார்கள்.

‎அந்த வகையில், 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீட்டையும், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். முதல் பாகத்தில் இடம்பெற்ற அதிரடி காட்சிகள், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பு ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால் இரண்டாம் பாகத்திலும் அதேபோன்ற விறுவிறுப்பான அனுபவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாளை (அக்.15) இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சென்னை காசி திரையரங்கில் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு, திரைப்பட வெளியீட்டின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதேபோல் நடிகர் தனுஷும் ரஜினியின் தரிசனம் பார்க்க இருப்பதாக அவரது எக்ஸ தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.