📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 13, 2026 03:30 PM

ஜெத்தாவில் தமிழ் இசை விருந்து

ஜெத்தாவில் தமிழ் இசை விருந்து

ஜெத்தாவில் தமிழ் இசை விருந்துஜெத்தா: செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் இசை பிரியர்களும், சென்னை எக்ஸ்பிரஸ் உணவகமும் இணைந்து ஜெத்தா நகரில் தமிழ் இசை விருந்து என்னும் நிகழ்ச்சியை நடத்தியது.வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை இரவு சென்னை எக்ஸ்பிரஸ் உணவக கூட்ட அரங்கில் செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் தமிழ் இசை விருந்து நிகழ்ச்சி நடந்தது. உழைத்துக் களைத்த மக்களை மகிழ்விக்க மாதமொரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் பாடகர்கள் நூஹ் பீமா பள்ளி, ரஃபிக், தஞ்சை ஜாஹிர் ஹுசைன், ரம்யா புரூஸ் உள்ளிட்ட பாடகர்கள் பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.நிகழ்ச்சியில் ஹஸன் கொண்டொட்டி, நவாஸ் பீமா பள்ளி, ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் பேரரசு, ரமணா, செங்கடல் தமிழ்ச் சமூக குலாம் மொய்தீன், அப்பாஸ், இர்ஃபான், ராயிஸ், மைக்கேல் பட்டி பாரூக், நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Kia நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். ஏராளமான தமிழ் மற்றும் மலையாள மக்களும், சென்னை எக்ஸ்பிரஸ் உணவக நுகர்வோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை ஜெத்தா 3 ஸ்டார் மியூஸிக்கல்ஸ் ஆசிரியை சுவீஜா சத்யன் தொகுத்து வழங்கினார். அவருக்கு துணையாக கதீஜா அவர்கள் சிறப்பாக வழிநடத்தினர் - ஜெத்தாவில் இருந்து எம்.சிராஜ்