சென்னை: யூடியூப் சேனல் மற்றும் அதன் ஊழியரை மிரட்டி ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், வாட்டர் மெலன் திவாகர் என்பவரை கீழ்ப்பாக்க
சென்னை: யூடியூப் சேனல் மற்றும் அதன் ஊழியரை மிரட்டி ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், வாட்டர் மெலன் திவாகர் என்பவரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்று வாட்டர் மெலன் திவாகர் என்பவரை நேர்காணல் எடுத்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வாட்டர் மெலன் திவாகர் யூடியூப் சேனல் நிறுவனம் மற்றும் ஊழியர்கள் தன்னை தாக்கியதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவை நீக்க கோரி யூடியூப் சேனல் சார்பில் அதன் ஊழியர் ஒருவர் வாட்டர் மெலன் திவாகரிடம் பேசிய போது, அவர் வீடியோவை நீக்க ரூ.1 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தர மறுத்த ஊழியர் மற்றும் அவர் பணியாற்றிய யூடியூப் சேனல் குறித்து ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் சார்பில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்திய போது, வாட்டர் மெலன் திவாகர் ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அதன்படி போலீசார் வாட்டர் மெலன் திவாகர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே வாட்டர் மெலன் திவாகர் வீடியோ கட்சி மூலம் தனியார் யூடியூப் சேனல் ஒன்று தன்னை கீழ்ப்பாக்கத்தில் என்னை அடைத்து வைத்து தாக்கி, அத்துமீறி வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தாமல் போலீசார் தன் மீது ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து போலீசார் ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக வாட்டர் மெலன் திவாகரை நேற்று காலை மதுரையில் வைத்து கைது செய்தனர். அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.