📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 03, 2026 05:03 PM

இங்கிலாந்து அரசர் சார்லஸை எல்லாம் சந்திக்க முடியாது.. பாகிஸ்தான் வீரர் போர்க்கொடி.. என்ன நடந்தது?

இங்கிலாந்து அரசர் சார்லஸை எல்லாம் சந்திக்க முடியாது.. பாகிஸ்தான் வீரர் போர்க்கொடி.. என்ன நடந்தது?

இங்கிலாந்து அரசர் சார்லஸை எல்லாம் சந்திக்க முடியாது.. பாகிஸ்தான் வீரர் போர்க்கொடி.. என்ன நடந்தது?

லண்டன்: பாகிஸ்தான் வீரர் ஒருவர் இங்கிலாந்து அரசர் சார்லஸை நேரில் சந்திக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி - PCB) பிறப்பித்த உத்தரவை மீறி, இந்தச் சந்திப்பைப் புறக்கணித்து தனது போர்க்கொடியைத் தூக்கியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை அடுத்து ஏழு வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் அந்த வீரரும் ஒருவர் என கூறப்படுகிறது. பிசிபி தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அணியில் இருந்து 7 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனால் சில பாகிஸ்தான் வீரர்கள் மனமுடைந்த நிலையில் இருந்தனர். இதற்கிடையே லண்டனிலுள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் இங்கிலாந்து அரசர் சார்லஸை சந்திக்குமாறு பிசிபி-யால் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இந்தச் சந்திப்பில் நீக்கப்பட்ட 7 வீரர்களில் முகமது அவாயிஸ் ஜாபர், ஆமிர் ஜமால், குர்ரம் ஷாசாத், அலி உஸ்மான் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இரண்டு வீரர்கள் பங்கேற்க தயக்கம் காட்டிய போதும், பிசிபி-யின் கடும் கட்டாயத்தால் கலந்துகொண்டனர். ஆனால், 7-வது வீரர் பிசிபி-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து மன்னரைச் சந்திக்கும் நிகழ்வை முற்றிலுமாகப் புறக்கணித்தார். புறக்கணித்த அந்த வீரரின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்தச் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பிசிபி தலைவர் மோஷின் நக்வி ஆகியோர் இங்கிலாந்து மன்னருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர். பாகிஸ்தான் அணிக்கு அரசர் சார்லஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் அடுத்த புதன்கிழமை தொடங்க உள்ளது. இந்தத் தொடரை ஏற்கனவே பாகிஸ்தான் இழந்த நிலையில், மீதமுள்ள வீரர்களைக் கொண்டு கௌரவ வெற்றிக்காக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

7 வீரர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தேர்வுக்குழுவினருக்கு பிசிபி நோட்டீஸ் அனுப்பியதும், லிங்க்ட்இன் தளம் வழியாக புதிய ஃபீல்டிங் பயிற்சியாளரை பிசிபி தேடுவதும் உலக அளவில் பெரும் கேலிக்குள்ளாகி வரும் வேளையில், இந்த புதிய புறக்கணிப்பு விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.