📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 17, 2026 10:02 PM

IND vs WI: 5வது டி20யில் மழை காரணமாக 9 ஓவர்களாக குறைப்பு.. புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு

IND vs WI: 5வது டி20யில் மழை காரணமாக 9 ஓவர்களாக குறைப்பு.. புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு

IND vs WI: 5வது டி20யில் மழை காரணமாக 9 ஓவர்களாக குறைப்பு.. புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு

பெங்களூரு: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஐந்தாவது டி20 போட்டிக்கான மழை காரணமாக போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மைதானத்தில் கனமழை பெய்ததால், ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

பெங்களூரில் மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்த நிலையில், போட்டி நேரத்தை நெருங்கும்போது மழையின் அளவு சற்றே குறைந்திருந்தது. இருப்பினும், டாஸ் போடும் நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மீண்டும் மழை தீவிரமடைந்தது.

இதனால், டாஸ் 2 மணி நேரம் கழித்தே போடப்பட்டது. ஆட்டம் 9 ஓவர்களாகவும், பவர்பிளே 2.4 ஓவர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியை பொறுத்த வரை 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று சிவம் துபேவும் அணிக்கு திரும்பியுள்ளார். இருவருக்கும் பதிலாக நிதிஷ்குமார் மற்றும் மயங்க் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக ஆர்ஸ்தீப் சிங் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அணியில் நீடிக்கிறார். வழக்கம் போல் குல்தீப், வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது டக்வொர்த் லுயிஸ் விதி அமலுக்கு வரும் என்பதால், சேஸிங் செய்யும் அணிக்கே தற்போது சூழல் சாதகமாக மாறியுள்ளது.

இதனிடையே, மழை நின்றவுடன் போட்டியை விரைவாகத் தொடங்க சின்னசுவாமி மைதானத்தில் உள்ள அதிநவீன சப்-ஏர் வடிகால் அமைப்பு பெரிதும் உதவியது. 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சாதனம், மைதானத்தில் தேங்கும் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் திறன் கொண்டது.

புல்வெளிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள துளையிடப்பட்ட குழாய் நெட்வொர்க் மூலம் மழைநீரை இந்த அமைப்பு விரைவாக உறிஞ்சுகிறது. இதனால் மழை நின்ற சில நிமிடங்களிலேயே ஈரம் காய்ந்து, மைதானம் ஆட்டத்திற்குத் தயாராகிவிட்டது குறிப்பிடத்தக்கது.