Tamil Nadu
October 18, 2026 01:02 AM
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்தது.
தலைநகர் சென்னையில் சனிக்கிழமை மாலை திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள். இது தவிர கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
நகரின் பல பகுதிகளில் குறுகிய நேரத்தில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை கொட்டியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மீட்புக்குழுவினர் உஷார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் காரணமின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu