📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 15, 2026 10:33 PM

IND vs AFG: இனி ஹர்திக் தேவையில்லை.. பவுலிங்கில் பட்டையை கிளப்பிய ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி

IND vs AFG: இனி ஹர்திக் தேவையில்லை.. பவுலிங்கில் பட்டையை கிளப்பிய ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி

IND vs AFG: இனி ஹர்திக் தேவையில்லை.. பவுலிங்கில் பட்டையை கிளப்பிய ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி ரன் ஏதும் எடுக்காமல் ரஹ்மானுல்லா குர்பாஸின் விக்கெட்டை இழந்தது.

இருப்பினும், கேப்டன் இப்ராஹிம் சத்ரான் மற்றும் செடிகுல்லா அடல் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுக்க போராடியது. ஒன்பதாவது ஓவரில் நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே இப்ராஹிமின் விக்கெட்டை வீழ்த்தி இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.

உடலை நோக்கி வீசப்பட்ட ஷார்ட்-லென்த் பந்தை பேட்ஸ்மேன் சரியாக கணித்து அடித்தாலும், அது டீப் மிட்-விக்கெட்டில் இருந்த ஃபீல்டரிடம் நேராகச் சென்றது. எல்லையின் அருகில் நின்றிருந்த ரவி பிஷ்னோய் எந்த தவறும் செய்யாமல் ஒரு சிறப்பான கேட்ச்சை பிடித்தார்.

இப்ராஹிம் 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடைய விக்கெட்டைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சரிவைச் சந்தித்தது. களத்தில் நன்கு நிலைத்து விளையாடி வந்த இப்ராஹிமின் விக்கெட் ஆப்கானிஸ்தான் அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து குலாப்தீன் நைப் மற்றும் ரஷித் கான் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் 3 ஓவர் வீசிய நிதிஷ் குமார், 24 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் டி20 போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. அவர் வீசிய 2 ஓவர்களில் 15.00 எகானமியில் 30 ரன்களை வாரி வழங்கியிருந்தார். ஆனால், இப்போட்டியில் தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இடம்பெறாத நிலையில், அவருடைய இடத்தில் விளையாடும் நிதிஷ் குமார் கட்டுகோப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவருடைய இடத்தையும் உறுதி செய்துள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரெட்டியின் பந்துவீச்சு கடந்த காலங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், இந்த செயல்பாடு அவருக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், நடு ஓவர்களில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இந்திய அணிக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதகமான விஷயமாகும்.