📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 15, 2026 07:03 AM

Gold: சென்ற ஆண்டு மாதிரி ஃபீல் பண்ணாமல், இந்த ஆண்டு புத்திசாலித்தனமா தொடங்குங்க!

Gold: சென்ற ஆண்டு மாதிரி ஃபீல் பண்ணாமல், இந்த ஆண்டு புத்திசாலித்தனமா தொடங்குங்க!

கடந்த ஆண்டு, தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தபோது, தங்கத்தில் முதலீடு செய்யாமல் விட்டுவிட்டோமே என்று ஃபீல் செய்தவர்கள் பலர்.

இன்னும் பலர், தங்கம் விலை உச்சத்தில் இருந்தபோது முதலீடு செய்து, இப்போது விலை சரிவில் சிக்கியுள்ளனர்.

கடைசி நேரத்தில் ஃபீல் செய்யாமல் இருக்கவும், அவசரத்தில் முதலீடு செய்து சறுக்காமல் இருக்கவும், இப்போதே முந்துங்கள்.

தங்க முதலீட்டிற்கு நல்ல நேரம் இது.

ஆம்... பல்வேறு சர்வதேச காரணிகளால் தங்கம் விலை சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் குறைந்துள்ளது. இதனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எஸ்.ஐ.பி முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கோல்டு இ.டி.எஃப்களில் முதலீடு செய்வது நல்லது.

இது சைலண்டாக எந்தச் செய்கூலி, சேதாரம் இல்லாமலும், ஆனால், தொடர்ச்சியான நல்ல முதலீடாக இருக்கும்.

குறைந்த விலையில் முதலீட்டைத் தொடங்கும்போது, இ.டி.எஃப்பில் உங்களுக்கு அதிக யூனிட்டுகளும் கிடைக்கும்.