📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 15, 2026 12:03 AM

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து லாபம் ஈட்டியதாக வீடியோ வெளியிட்டு மோசடி: 3 பேர் கைது!

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து லாபம் ஈட்டியதாக வீடியோ வெளியிட்டு மோசடி: 3 பேர் கைது!

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து லாபம் ஈட்டியதாக வீடியோ வெளியிட்டு மோசடி: 3 பேர் கைது!

சென்னை: ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டியதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்களை வெளியிட்டு, சுமார் ரூ. 6 கோடி வரை பண மோசடி செய்த 3 பேரை ஆவடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

'ஆன்லைன் டிரேடிங்' பயிற்சி அளிப்பதாக கூறி தலா ஒருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் 6 கோடி ரூபாய் மோசடி செய்த, சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கல்லூரி நண்பர்களான கவின் பிரசாத், கீர்த்திவாசன் மற்றும் பார்த்திபன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் 'இன்ஸ்டா' சமூக வலைதளத்தில் 40 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், 'டிரேடிங்' குறித்து கற்றுத் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.பேட்ச் ஒன்றிற்கு 40 முதல் 50 பேரை சேர்த்து, கோவளம், முட்டுக்காடு, கொடைக்கானல், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ரிசார்ட்டை மொத்தமாக ஏழு நாட்கள் வாடகைக்கு எடுத்து, ஒரு அறைக்கு 10 பேர் வீதம் தங்க வைத்து ஆன்லைன் டிரேடிங் கற்றுக்கொடுத்துள்ளனர்.

ஆர்.பி.ஐ.யால் தடை செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சிகளால் முதலீடு செய்ய வைத்துள்ளனர். சட்டவிரோதமாக முதலீடு செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். மேலும், பயிற்சி எடுக்க வந்த மாணவர்களை, அதிக லாபம் அடைந்தது போல் நடிக்க வைத்து வீடியோ எடுத்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.