📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 11:04 AM

“எஸ்ஐஆர் விவகாரத்தில் முதல்வர் விஜய் பதவி விலகத் தயாரா?”

“எஸ்ஐஆர் விவகாரத்தில் முதல்வர் விஜய் பதவி விலகத் தயாரா?”

சென்னை: ‘எஸ்ஐஆர் நடைமுறைக் பிறகு பதவிக்கு வந்தவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்தை தவெக ஏற்றுக்கொள்கிறதா? ‘நான் சட்டவிரோத முதல்வர்’ என்பதை ஒப்புக்கொண்டு விஜய் பதவி விலகத் தயாரா?’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எஸ்ஐஆருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கிறதா தவெக? கூட்டணி விசுவாசத்துக்காக இந்திய அரசியலமைப்பை எதிர்க்க துணிந்துவிட்டாரா முதல்வர் விஜய்?

அனைத்து மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில், போலி வாக்காளர்களை கண்டறிதல், வாக்காளர் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு உட்பட பல செயல்முறைகளை முன்னெடுத்து வரும் எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள தவெகவுக்கு எனது கடும் கண்டனங்கள்.