📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 01:00 PM

மீண்டும் அதிர்துல: சௌந்தர்யா

மீண்டும் அதிர்துல: சௌந்தர்யா

ஜெயிலர்-2 படத்தின் வெளியீடு பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா, மீண்டும் அதிருதுல்ல என்று கூறியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘ஜெயிலர்’.

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரஃப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2ஆம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், மிர்னா மேனன், யோகி பாபு, ஜாபர் சாதிக் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். புதியவர்களாக எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, ஜடின் சர்மா, மேக்னா ராஜ் சர்ஜா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இத்திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனாக மீண்டும் களமிறங்கியுள்ளார் ரஜினி. முதல் பாகத்தின் சம்பவங்களைத் தொடர்ந்து, ஒரு பெரிய குற்றப் பின்னணி கொண்ட கும்பலை விசாரிக்க அவர் மீண்டும் களத்திற்கு வருகிறார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இந்நிலையில் படம் பார்த்த பிறகு சௌந்தர்யா, ரஜினிகாந்தை வாழ்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

“டைகர் முத்துவேல் பாண்டியனாக, என் அப்பா திரையில் மீண்டும் ஒரு முறை அதிர வைத்திருக்கிறார்.

“51 வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார். ‘51 வருட ரஜினிசம்’ இந்தத் திரைப்படத்தை இயக்கிய நெல்சன், இசையமைத்திருந்த அனிருத் என ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள்.

“இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது. மிகவும் பெருமையாக இருக்கிறது,” என்று நெகிழ்ச்சியுடன் சௌந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று என விவரித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனும் ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றிக்காக அப்படக்குழுவினருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கமல்ஹாசன் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் எனத் தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், சன் பிக்சர்ஸ் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்,” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் திரையில் காட்டுத் தீயைப் பற்றவைக்கிறார். அவரிடமிருந்து என் கண்களை எடுக்கவே முடியவிலை. ‘லவ் யூ தலைவா’. சிலிர்க்க வைக்கும் அதிரடி விருந்து. நெல்சனின் எழுத்து, இயக்கம், அனிருத்தின் இசை ஒவ்வொரு காட்சியிலும் அதிவேக ஆற்றலை மூச்சாகப் பாய்ச்சுகிறது,” என்று கூறியுள்ளார்.

2023ல் வெளியான ‘ஜெயிலர்’ படம் பெரிய வசூலைக் குவித்த படமாக இருந்தது. அதன் தொடர்ச்சியான படம் என்பதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் வசூல் உலக அளவில் 100 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து நான்கு நாள்கள் தமிழகத்தில் விடுமுறை நாள்களாக இருப்பதால் குடும்பத்தினர் அதிகமானோர் வந்து பார்ப்பார்கள் எனப் படக்குழுவினர் கூறுகின்றனர்.