📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 25, 2026 09:04 AM

அம்பிகா மீதான ரூ. 49 கோடி காசோலை மோசடி புகார்: விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா

அம்பிகா மீதான ரூ. 49 கோடி காசோலை மோசடி புகார்: விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா

அம்பிகா மீதான ரூ. 49 கோடி காசோலை மோசடி புகார்: விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா

ராதாவிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பெற்ற பிறகே, அம்பிகா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவது குறித்து போலீசார் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Published : September 25, 2026 at 8:08 AM IST

சென்னை: தனது அக்காவும் நடிகையுமான அம்பிகா மீது ரூ. 49 கோடி காசோலை புகார் அளித்திருந்த நிலையில், இதுதொடர்பான காவல்துறை விசாரணைக்கு நடிகை ராதா நேரில் ஆஜராகவில்லை.

1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. இருவரும் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதனிடையே, சகோதரிகள் இருவருக்கும் இடையே சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அண்மைக்காலமாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தான் வசித்து வந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்திட்ட வெற்று 5 காசோலைகளை தனது சகோதரி அம்பிகாவும், சகோதரர் மல்லிகார்ஜுனனும் பயன்படுத்தி சுமார் ரூ. 49 கோடி அளவுக்கு பணத்தை அபகரிக்க முயன்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக நடிகை அம்பிகா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ராதா தான் தங்களுக்கு காசோலைகளை அளித்ததாக அவர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, புகாரின் உண்மைத்தன்மையை முழுமையாக விசாரிக்கும் வகையில், அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக புகார் தொடர்பான ஆவணங்களுடன் செப்டம்பர் 24-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி நடிகை ராதாவுக்கு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் முன்பு நடிகை ராதா இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுதொடர்பாக ராதா தரப்பில் இருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், புகார் தொடர்பான விசாரணைக்கு வேறு ஒரு நாளில் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை முழுமையாக அளிப்பதாக ராதா தரப்பில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.