ஆடை படத்தில் நடித்ததை போல ஆடையின்றி இனிமே நடிக்க மாட்டேன்.. அமலா பால் என்ன இப்படி சொல்லிட்டாங்க!
சென்னை: ஆடை படத்தில் நடித்த பிறகு நடிகை அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மேலும், இயக்குநர் ஏ.எல். விஜய் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
மேயாத மான் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ரத்னகுமார் ஆடை படத்தை அமலா பாலை வைத்து இயக்கினார். படம் முழுவதும் ஒரு ஆபீஸில் நிர்வாணமாக மாட்டிக் கொண்ட நடிகை அமலா பால் எப்படி தப்பிக்கிறார். அவரை யார் எப்படி செய்தது? என்பதை கடைசியில் பிராங்க் பற்றிய விழிப்புணர்வு படமாக ரத்னகுமார் இயக்கி இருந்தார்.
அந்த படத்துக்குப் பிறகு இருவருக்குமே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்ப்புகள் டோரதி படத்துக்கு தறபோது கிளம்பியது போல அப்போதே கிளம்பின. இந்நிலையில், ஆடை போன்ற படத்தில் தான் நடிக்க மாட்டேன் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
டைப் காஸ்ட் பண்ண பார்த்தாங்க: 2019ம் ஆண்டு ரத்னகுமார் இயகக்தில் வெளியான ஆடை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதன் பின்னர், அதே போன்ற கதைகளையே இயக்குநர்கள் என்னிடம் கொண்டு வந்தார்கள். அதன் காரணமாகவே சில படங்களில் நடிப்பதையே தவிர்த்தேன். என்னை டைப் காஸ்ட் செய்து விடுவார்களோ என்று பயந்தேன் என சமீபத்தில் இந்தியா டுடே சவுத் கான்கிளேவ் 2026 நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் போது ஓபனாக பேசியுள்ளார்.
ஆடை போன்ற படத்தில் நடிக்க மாட்டேன்: ஆடை போன்ற படத்தில் இப்போ நடிக்க சொன்னால் நடிப்பீர்களா? என்கிற கேள்விக்கு இப்போதைக்கு இருக்கும் மெச்சூரிட்டிக்கு அதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன். தைரியமில்லாமல் இல்லை. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கான அவசியம் இல்லை என்று உணர்கிறேன் என்றார்.
2 மாசம் யோசிச்சேன்: ரத்னகுமார் கதை சொன்னாலும், எப்படி படமாக்குவார்கள் என்கிற சந்தேகம் என் மனதுக்குள் அதிகமாகவே இருந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அந்த படப்பிடிப்பை எப்படி நடத்துவார்கள் என ஏகப்பட்ட கேள்விகளை கேட்டேன். இயக்குநர் ரத்னகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் எனக்கு கொடுத்த நம்பிக்கை மற்றும் படப்பிடிப்பை அவர்கள் குறைந்த ஆட்களை வைத்து நடத்திய விதம் தான் அந்த படத்தில் நான் நடிக்கவே காரணம் என்றார்.
சிந்து சமவெளி: அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஹரிஷ் கல்யாண் அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். சிந்து சமவெளி படத்தில் நடித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என ஏற்கனவே பேட்டியளித்து இருந்தார் அமலா பால். தற்போது அதே பாணியில் பேசியுள்ளாரே என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.