📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 03, 2026 02:01 PM

Drishyam 3 Blue Sattai Maran Review

Drishyam 3 Blue Sattai Maran Review

சென்னை: மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் த்ரிஷ்யம். அந்த மொழியில் மூன்று பாகங்கள் வந்தது போல் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அந்தவகையில் நேற்று த்ரிஷ்யம் 3 ஹிந்தி வெர்ஷன் வெளியானது. அதனை அபிஷேக் பத்தாக் இயக்கியிருக்கிறார். அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தின் விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் வந்தது. ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஒரிஜினல் வெர்ஷன் எப்படி மூன்று பாகங்கள் வரை சென்றதோ; அதேபோல் ஹிந்தியிலும் வரிசையாக த்ரிஷ்யம் எடுக்கப்படுகிறது. அந்தவகையில் மூன்றாவது பாகம் நேற்று வெளியானது. ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

த்ரிஷ்யம் 3 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "படத்தின் ஆரம்பத்தில் மகனை பறிகொடுத்த தந்தை, தாயை காண்பிக்கிறார்கள். அந்த அம்மா தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். எனவே மகனை கொலை செய்தவர்களை பழி வாங்க மூன்றாவது முறையாக கொலை ஃபைலை தூசு தட்டுகிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

சவாலில் வெற்றி: எந்த சீக்வெல் எடுத்தாலும் சவால் பெரிதாக இருக்காது. இதில் முக்கியமான சவால் இருக்கிறது. ஜார்ஜ் குட்டி கேரக்டர் மாட்டுவாரா மாட்டாரா என்பதில் மாட்டமாட்டார் என்பதுதான் கதையின் முடிவு. அதுவும் நமக்கு தெரியும். இந்தப் படத்தில் ஜார்ஜ் குட்டி மாட்டாமல் இருக்க என்ன செய்வார் என்பதுதான் கதை. மாட்டிவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. க்ளைமேக்ஸ் தெரிந்துகொண்டே இரண்டரை மணி நேரம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இந்த சவாலில் அவர்கள் ஓரளவுக்கு வென்றிருக்கிறார்கள்.

லாஜிக் ஓட்டைகள்: மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் 3க்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் த்ரிஷ்யம் 2 கதையின் தொடர்ச்சி இதிலும் இருக்கிறது. காவல் துறையிடமிருந்து தப்பிப்பதற்கு என்ன வித்தை செய்தார் என்பது தொடர்பாக நான்கைந்து நல்ல சீன்கள் இருந்தன. சஸ்பென்ஸாகவும் இருந்தன. மலையாளத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன் நம்பும்படி இருக்கும். ஆனால் இதில் நம்பும்படி இல்லை. அது இந்தப் படத்தின் ஒரு மைனஸாக பார்க்கப்படுகிறது. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இதில் இருக்கின்றன.

மலையாளத்தைவிடவும் சூப்பர்: மலையாளத்தில் வந்த த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களை அப்படியே ஹிந்தியில் எடுத்தார்கள். ஆனால் மூன்றாவது பாகத்தில் சொந்தமாக சிந்தித்து எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் திக்கென்றுதான் இருந்தது. ஆனால் படம் பார்க்கும்போது நன்றாகத்தான் இருந்தது. மலையாளத்தில் வந்த த்ரிஷ்யம் 3யை விட இந்தப் படம் நன்றாக இருந்தது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்" என்றார்.