`ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு'
`ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு' - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! | Tamilnadu Live updates
தமிழ்நாடு, இந்தியா செய்திகள் - Live Blog | Stay updated
தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.
மேகதாது: `தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்!' - மோடிக்கு விஜய் கடிதம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்பு!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவை, சபாநாயகர் பிரபாகர் ஏற்றார். தற்போது வரை 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், திருச்சி கிழக்கோடு சேர்த்து மொத்தம் 5 தொகுதிகள் காலியாகி, இடைத்தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.
டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்.!
முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்கவிருக்கிறார் விஜய். இந்த சந்திப்பில் தமிழகத்தின் நலத்திட்டங்களுக்கான நிதியுதவி கோரியும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் முதல்வர் விஜய் பிரதமரிடம் கோரிக்கை வைப்பார் எனத் தகவல்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ராஜினாமா
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் நேற்று (மே.25) இணைந்தனர். இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசைக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ய தலைமை செயலகத்திற்கு சென்றிருக்கின்றனர். ராஜினாமா செய்தவுடன் அவர் தவெகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
முதல்வர் விஜய்யைச் சந்தித்துத் தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்துப் பேசுவதற்கு, முதல்வர் நேரம் ஒதுக்க வேண்டும் என மனு கொடுக்க வந்த விவசாயிகள், தங்களை மனு கொடுக்க விடாமல் காவலர்கள் தடுப்பதாகக் கூறித் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
மதுராந்தகம் - மரகதம் குமரவேல், தாராபுரம் - சத்யபாமா, பெந்துறை - ஜெயக்குமார் ஆகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக நேற்று சபாநாயகர் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது மதுராந்தகம், தாராபுரம், பெந்துறை ஆகிய தொகுதிகள் காலியானதாக அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் CNG விலை உயர்வு எவ்வளவு?
சென்னையில் ஒரு கிலோ சி.என்.ஜி ரூ.91.50-க்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்தது.
அது இன்று ரூ.3.50 உயர்ந்து, சென்னையில் ஒரு கிலோ சி.என்.ஜி ரூ.95-க்கு விற்பனை ஆகி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 34 பைசா உயர்ந்து, ரூ.108.01-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 23 பைசா உயர்ந்து ரூ.99.78-க்கு விற்பனை ஆகி வருகிறது.
CNG விலையும் ஏற்றம்!
இந்திய அரசு CNG (Compressed Natural Gas) விலையைஇவ ஏற்றியுள்ளது. இது மே 15-ம் தேதியில் இருந்து நான்காவது முறை ஏற்றம் ஆகும்.
இன்று CNG ஒரு கிலோவிற்கு ரூ.2 ஏற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் தற்போது CNG-யின் விலை கிலோவிற்கு ரூ.83.09 ஆகும்.