📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 09, 2026 08:00 AM

IND vs ENG 4வது டி20 பிளேயிங் 11.. டெஸ்ட் மேட்ச் ஆடும் இந்திய வீரருக்கு இன்னைக்கு தான் கடைசி சான்ஸ்

IND vs ENG 4வது டி20 பிளேயிங் 11.. டெஸ்ட் மேட்ச் ஆடும் இந்திய வீரருக்கு இன்னைக்கு தான் கடைசி சான்ஸ்

IND vs ENG 4வது டி20 பிளேயிங் 11.. டெஸ்ட் மேட்ச் ஆடும் இந்திய வீரருக்கு இன்னைக்கு தான் கடைசி சான்ஸ்

பிரிஸ்டல்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று (ஜூலை 9) பிரிஸ்டல் நகரில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இழப்பதைத் தவிர்க்க இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில், ஃபார்ம் இன்றி டெஸ்ட் போட்டி போல ஆமை வேக பேட்டிங் ஆடும் துணை கேப்டன் திலக் வர்மாவுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

2026 டி20 உலகக்கோப்பையை வென்றதற்குப் பிறகு விளையாடிய 5 போட்டிகளிலும் இந்தியா இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் தவித்து வருகிறது. தற்போதைய இங்கிலாந்து தொடரிலும் 0-2 எனப் பின்தங்கியுள்ளது. இந்திய அணியின் இந்தத் தொடர் சரிவுக்கு பேட்ஸ்மேன்களின் சொதப்பலே முக்கிய காரணமாகும்.

குறிப்பாக, அணியின் துணை கேப்டனான திலக் வர்மா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்தத் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 114.29 ஆக மட்டுமே உள்ளது. 2025-ம் ஆண்டுக்கு பிறகு டி20 போட்டிகளில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவரது ஸ்டிரைக் ரேட் 109.5 ஆக மிகவும் மோசமாகச் சரிந்துள்ளது.

திலக் வர்மா 5-வது இடத்தில் தொடர்ந்து சொதப்பி வருவதால், பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சனை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அயர்லாந்து தொடரில் 2 போட்டிகளில் சொதப்பிய சஞ்சு சாம்சனை உடனடியாக அணியில் இருந்து நீக்கிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், திலக் வர்மாவை மட்டும் ஏன் தொடர்ந்து ஆதரித்து வருகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த போட்டியில் திலக் வர்மா சொதப்பினால், அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கடந்த போட்டியில் ரவி பிஷ்னோய்க்குப் பதிலாகக் களம் இறங்கிய பிரின்ஸ் யாதவ் சிறப்பாகச் செயல்பட்டதால், இந்த போட்டியிலும் அவர் ஆடும் லெவனில் நீடிப்பார். வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் பந்துவீச்சுப் பொறுப்பை கவனித்துக் கொள்வார்கள்.

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்: வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ்.