📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 04, 2026 05:01 PM

24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜெயராம்

24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜெயராம்

24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜெயராம் - சிம்ரன்... எதற்காக தெரியுமா?

’ராட்சசி’ பட இயக்குனர் கௌதம் ராஜின் புதிய படத்திற்காக ஜெயராம் - சிம்ரன் கூட்டணி 24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளது.

கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின.

கௌதம் ராஜின் படைப்புகள்

ஜோதிகா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ’ராட்சசி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கௌதம் ராஜ். முதல் படமே இவருக்கு வெற்றிப் படமாக அமைய ரசிகர்கள் மத்தியில் நன்கு கவனம் பெற்றார். இதையடுத்து, 2023ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான கழுவெத்தி மூர்க்கன் என்ற படத்தையும் இவர் இயக்கியிருந்தார். சமூக கருத்தை பேசும் இத்திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லையென்றாலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கௌதம் ராஜ் இயக்கும் புதிய படத்தின் பூஜை கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. காதல் கலந்த காமெடி கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தில் ஜெயராம் - சிம்ரன் ஜோடி இணைந்து நடிக்க வொயிட் கார்பெட் பிலிம்ஸ் மற்றும் ரிடெக்டட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் மூலமாக நடிகர் ஆர்யா இத்திரைப்படத்தை வழங்குகிறார். இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

ஜெயராம் ஜோடியாக சிம்ரன்

முதன் முறையாக நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் இத்திரைப்படத்தில் நடிக்கிறார். முன்னதாக, 2002 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றி பஞ்சதந்திரம் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்த நிலையில், இப்படத்தின் மூலம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

ஜெயராம் பேச்சு

படம் குறித்து நடிகர் ஜெயராம் கூறியதாவது, “நடிகை சிம்ரன் உடன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்தேன். அதன் பின் அவருடன் ஜோடியாக தற்போது முதன்முறையாக நடிக்கிறேன். மகிழ்சியாக உள்ளது” இவ்வாறு பேசினார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ’பரிமளா அண்ட் கோ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடங்கியது படப்பிடிப்பு

காதல் கலந்த காமெடி படமாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக கௌதம் ராஜ் இயக்கிய ’ராட்சசி’ மற்றும் ’கழுவெத்தி மூர்க்கன்’ ஆகிய 2 படங்களும் சமூக கருத்தை பேசிய நிலையில், இத்திரைப்படம் காமெடி பாணியில் உருவாவதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி