📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 04, 2026 06:03 PM

`SIR, வாக்குப்பதிவு இயந்திர முறையை நீக்க வேண்டும்'

`SIR, வாக்குப்பதிவு இயந்திர முறையை நீக்க வேண்டும்'

`SIR, வாக்குப்பதிவு இயந்திர முறையை நீக்க வேண்டும்'- மும்பை பேரணியில் தாக்கரே சகோதரர்கள் கோரிக்கை!

சிறப்பு வாக்காளர் திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பையில் நடந்த போராட்டத்தில் தாக்கரே சகோதரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்து மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். 'மிகப்பெரிய கர்ச்சனை அணிவகுப்பு' என்ற பெயரில் மும்பையின் மெட்ரோ சினிமாவில் இப்பேரணியை தொடங்கினர். இப்பேரணி தெற்கு மும்பையில் உள்ள மும்பை மாநகராட்சி தலைமையகம் வரை சென்றது. காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் இப்பேரணியில் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்பேரணியின் இறுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர் நடைமுறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு செய்வது நிறுத்தப்பட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் 2017-18 முதலே கூறி வருகிறேன். வாக்குகளின் எண்ணிக்கை திடீரெனக் குறைய முடியாது.

தேர்தல் கமிஷன் தீர்மானிக்க முடியாது

இந்த அரசாங்கம் எவ்வாறு நடத்தப்படுகிறது மற்றும் எந்த வழிகளில் அது நிர்வகிக்கப்படுகிறது என்பது குறித்தே எங்கள் கோபம் உள்ளது. யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது. மக்களே அதைத் தீர்மானிப்பார்கள்," என்று கூறினார்.

இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ''தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மக்களின் வாக்களிக்கும் அதிகாரத்தை பறித்துக்கொண்டுள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து வங்காளதேசத்தினரை நீக்குவதே எஸ்.ஐ.ஆர் பயிற்சியின் நோக்கம் என்றால், எத்தனை வங்கதேசத்தை சேர்ந்தவர்களை நீங்கள் கண்டுபிடித்தீர்கள். சர்வாதிகாரியை தூக்கி எறிய நாங்கள் இன்று இங்கு கூடியிருக்கிறோம். நாடு முழுவதும் 13 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இது வெறும் இடைத்தேர்தல் தானே. அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட்டுவிடப் போகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. நாளை விசாரணை நடைபெறுமா என்பது இன்னும் முடிவாகவில்லை'' என்றார்.

சர்வாதிகார ஆட்சி

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய `காக்ரோச் ஜனதா கட்சி' இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பையின் சிவாஜி பூங்காவில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தியது.